தமிழ்நாடு முதலமைச்சர் முகஸ்டாலின் அவர்கள் சென்னை தலைமை செயலகத்திலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக 9.75 கோடி மதிப்பில் திறன் உயர்த்தும் பணிகளை துவக்கி வைத்தார்கள்
தமிழ்நாடு முதலமைச்சர்
முகஸ்டாலின் அவர்கள் சென்னை தலைமை செயலகத்திலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக, தமிழ்நாடு மின்சார வாரியம் – மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக் கழகம் – மின் தொடரமைப்புக்
கழகம் சார்பாக, ஓசூர், ஆலூர் மற்றும் குருபரபள்ளி துணை மின் நிலையங்களில், ரூ. 9.75 கோடி மதிப்பில் திறன் உயர்த்தும் பணிகளை துவக்கி வைத்தார்கள்.
தொடர்ந்து கிருஷ்ணகிரி வட்டம் குருபரபள்ளி துணை மின்நிலையத்தில், மாவட்ட ஆட்சித் தலைவர் வி.ஜெயசந்திர பானுரெட்டி அவர்கள், குத்துவிளக்கேற்றி, கணினி வாயிலாக திறன் உயர்த்தும் பணிகளை பார்வையிட்டார். உடன் தமிழ்நாடு மின்சார வாரிய மேற்பார்வை பொறியாளர்
அ.ஏஞ்சலா சகாயமேரி, செயற்பொறியாளர்கள் முத்துசாமி, கவிதா,உள்ளிட்ட பலர் உள்ளனர்.