வாரிசை புகழ்ந்த ஜெயகுமார்
சென்னையில் நடைபெற்ற விழாவில் ஐந்து ரூபாய் டாக்டர் ஜெயச்சந்திரன் இப்பரிசு சரத் ஜெயச்சந்திரன் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வானளாவ புகழ்ந்தார்
சென்னை ராயபுரம் செயின்ட் மேரீஸ் பள்ளியில் சுதந்திர தின பவள விழா மற்றும் ஐந்து ரூபாய் டாக்டர் ஜெயச்சந்திரன் 75வது பிறந்த நாள் விழா ஆகியவற்றையொட்டி மெகா மருத்துவ முகாம் நடைபெற்றது.
இந்த முகாமில் பங்கேற்று சட்டமன்ற உறுப்பினர் ஐட்ரீம் மூர்த்தி ஐஏஎஸ் அதிகாரி ஆனந்தகுமார் ஐபிஎஸ் அதிகாரி ரம்யா பாரதி காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் எர்னஸ்ட்பால், ராமலிங்கஜோதி பேசினர்
நிகழ்ச்சியில் திடீர் விருந்தினராக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் வந்தது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. நிகழ்ச்சியில் நிகழ்ச்சியில் பங்கேற்ற மருத்துவர்களுக்கு ரத்ததானம் செய்த இளைஞர்களுக்கும் சான்றிதழ்களை அவர் வழங்கினார் .
அப்போது பேசிய அவர் இந்த நிகழ்ச்சிக்கு நான் இப்பொழுது சர்பரைசாக இருக்கிறேன்.இரண்டு ஆண்டுகளாக அழைப்பு விடுத்தார்கள் அப்போது வர முடியவில்லை.எனக்கு டாக்டர் ஜெயச்சந்திரன் 41ஆண்டு கால நண்பர் .மருத்துவத் துறையில் அவர் ஆற்றிய பங்கு அளப்பரியது ஏழை எளியவர்களுக்கு இலவச மருத்துவம் செய்து வடசென்னையை திரும்பிப் பார்க்க வைத்தவர் அவர்
ஜெயச்சந்திரனின் வழியை பின்பற்றி அவருடைய வாரிசு சரத் சந்திரன் மற்றும் குடும்பத்தார் ஆற்றிவரும் சேவை பாராட்டத்தக்கது வாழ்த்துக்கள் என்று அவர் புகழ்ந்தார்