வேலூர் மெயின்பஜாரில் போக்குவரத்து இடையூறு, ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்.
வேலூர் மாநகரம் போக்குவரத்து நிறைந்தது. போக்வரத்து சாலையை ஆக்கிரமித்து தெரு யோரத்தை ஆக்கிரமித்து கடைகளை வைத்து சிறு வியபாரிகள் அட்டகாசம் செய்துவந்தனர். இதுகுறித்து புகார் ஆட்சியருக்கு சென்றது. ஆட்சியர் குமாரவேல் பாண்டியன், உத்தரவுப்படி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.ராஜேஷ்கண்ணா அதிரடியாக வேலூர் போக்குவரத்து காவல்துறைக்கு உத்தரவிட்டார்.
அதன்படிவேலூர் போக்குவரத்து காவல் ஆய்வாளர் நாகராஜன் மேற்பார்வையில், உதவி ஆய்வாளர் கன்னியப்பன் தலைமையில் மெயின்பஜாரில் ஆக்கிரமிப்பு கடைகளை அதிரடியாக அகற்றினர். 50-க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்பு தெருயோர கடைகள் அகற்றப்பட்டன. அதேபோல் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தி வைக்கப்பட்ட ஆண்டு இருக்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்தனர் இதேபோல் மீண்டும் ஆக்கிரமித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை தெரிவித்து உள்ளது.