ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு குட்டைகார தெருவில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ பெரியபாளையத்தம்மன் ஆடி மாத திருவிழா
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு குட்டைகார தெருவில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ பெரியபாளையத்தம்மன் ஆடி மாத திருவிழா சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக ஆற்காடு பாலாற்றில் இருந்து புனித நீர் எடுத்து வந்து பெரியபாளையத்தம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது.
இதில் 300க்கும் மேற்பட்ட பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்து வேடங்கள் அணிந்து மேளதாளம் முழங்க ஊர்வலமாக எடுத்து வந்த பூ கரகத்திற்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. இறுதியில் ஜெய் மாருதி&கோ உரிமையாளர் சரவணன் மற்றும் குடும்பத்தார் தலைமையில், கோயில் தலைவர் விநாயகம் முன்னிலையில் அன்னதான நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் நடராஜ், சஞ்ஜெய், சதீஷ்குமார், சச்சின், அண்ணாதுரை, ராஜேஷ், பாலாஜி, விஸ்வநாதன், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் மற்றும் பக்தர்கள் பொதுமக்கள் என திரளானோர் கலந்து கொண்டனர்.