டாடா ஸ்டீல் செஸ் இந்தியா 4வது பதிப்பு பெண்கள் போட்டியை அறிமுகப்படுத்துகிறது
நவம்பர் 29 முதல் டிசம்பர் 4, 2022 வரை கொல்கத்தாவில் நிகழ்ச்சியை நடத்த உள்ளது
டாடா ஸ்டீல் செஸ் இந்தியாவின் 4வது பதிப்பு, பெண்கள்
போட்டியின் அறிமுகத்துடன் அறிவிக்கப்பட்டது. இந்த திறந்தவெளி போட்டியானது
இப்போது மூன்று பதிப்புகளாக உள்ளது. மேலும் அதன் நான்காவது பதிப்பில், டிஎஸ்சிஐ
பெண்கள் போட்டி அதே வடிவத்தில் -ரேபிட் மற்றும் பிளிட்ஸ் கொண்டிருக்கும். இந்த போட்டி
நவம்பர் 29 முதல் டிசம்பர் 4, 2022 வரை கொல்கத்தாவில் நடைபெறும்.
சிறந்த சர்வதேச கிராண்ட்மாஸ்டர்கள், சிறந்த இந்திய ஆண் மற்றும் பெண் கிராண்ட்மாஸ்டர்கள்,
இளம் இந்திய திறமையாளர்கள் மற்றும் போட்டியின் தூதர் மற்றும் ஆலோசகர் விஸ்வநாதன்
ஆனந்த் ஆகியோர் இந்த ஆண்டு போட்டியை மேம்படுத்துவார்கள். விளையாட்டு வரலாற்றில்
முதன்முறையாக, ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவின் பரிசு நிதி சமமாக இருக்கும்.
உக்ரைனை சேர்ந்த அன்னா மற்றும் மரியா முஸிசுக், ஜார்ஜியாவை சேர்ந்த நானா ஜாக்னிட்ஸே
மற்றும் போலந்தை சேர்ந்த அலினா காஷ்லின்ஸ்கயா ஆகியோர் பங்கேற்பதை ஏற்கனவே
உறுதிப்படுத்திய மகளிர் கிராண்ட்மாஸ்டர்கள் ஆவர். இந்திய செஸ் சூப்பர் ஸ்டார்களான
கோனேரு ஹம்பி மற்றும் ஹரிகா துரோணவல்லி ஆகியோருடன் வளர்ந்து வரும் நட்சத்திரம்
வைஷாலி ஆர் -ஆகியோர் சென்னையில் சமீபத்தில் முடிவடைந்த செஸ் ஒலிம்பியாட்
போட்டியில் வெண்கலம் வென்ற அணியில் இடம் பெற்றனர்.
இந்நிகழ்ச்சியில் டாடா ஸ்டீல் செஸ் இந்தியாவின் தூதர் விஸ்வநாதன் ஆனந்த்
பேசுகையில், “இன்று செஸ் ஒரு முக்கிய விளையாட்டாக கருதப்படுவதில் நான் மிகவும்
மகிழ்ச்சியடைகிறேன். டாடா ஸ்டீல் செஸ் இந்தியா போன்ற போட்டிகள் மூலம் நமது இளம்
வீரர்கள் சர்வதேச கிராண்ட்மாஸ்டர்களுடன் போட்டியிடுவது உண்மையில் புதிய
சாம்பியன்களை உருவாக்குவதற்கு உதவுகிறது. இன்று, இந்தியா செஸ் பவர் ஹவுஸாக
கருதப்படுகிறது. இதில் ஆண்கள் மற்றும் பெண்கள் இருவரும் விளையாட்டில் சிறந்து
விளங்குகிறார்கள். ஆண்கள் பிரிவிற்கு சமமான பரிசு தொகையுடன் பெண்கள் போட்டியை
அறிமுகப்படுத்தியது வரவேற்கத்தக்க நடவடிக்கை மற்றும் ஒரு சிறந்த முன்முயற்சியாகும்.
மேலும் இது செஸ் ஆர்வலர்களிடையே நல்ல வரவேற்பை பெறும் என்று நாங்கள் நம்புகிறோம்.
செஸ் சமமான விளையாட்டாக இருக்க வேண்டும்..”என்றார்