சிவகங்கை மாவட்ட அறிவியல் மற்றும் கணித ஆசிரியர்களுக்கு பயிற்சி பணிமனை ஆலோசனை கூட்டம்
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள நடுநிலைப்பள்ளி, அரசு உயர்நிலைப்பள்ளி, அரசு மேல்நிலைப் பள்ளி அறிவியல் மற்றும் கணித ஆசிரியர்களுக்கு தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றம் சார்பில் பயிற்சி பணிமனையானது சிவகங்கை மாவட்ட திட்ட அலுவலக அரங்கில் நடைபெற்றது. சிவகங்கை மாவட்ட பயிற்சி ஒருங்கிணைப்பாளர் ஜெகநாதன் தலைமை வகித்தார். தமிழ்நாடு அறிவியல் இயக்க சிவகங்கை மாவட்ட செயலாளர் ஆரோக்கியசாமி முன்னிலை வகித்தார். ஆசிரியப் பயிற்றுநர் குடியரசி வரவேற்றார். காளையார்கோவில் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன பேராசிரியரும், தமிழ்நாடு அறிவியல் இயக்க சிவகங்கை மாவட்ட துணைத்தலைவர் முனைவர் சேவற்கொடியோன் பயிற்சி பணிமனையை தொடங்கி வைத்து சிறப்பாக வழி நடத்தினார். ஆசிரியர் பயிற்றுநர் செல்வராணி நன்றி கூறினார். இப்பயிற்சி பணிமனையில் 25க்கும் மேற்பட்ட அறிவியல் மற்றும் கணித ஆசிரியர்கள் கலந்து கொண்டு ஆலோசனைகள் வழங்கி சிறப்பித்தார்கள்.
Attachments area