ஈரோடு கணபதிபாளையத்தி ல்”ஒளிரும் ஈரோடு” சார்பில் “ஊருக்கு ஒரு குளம்” திட்டத்தின் கீழ் புதிய குளம் உருவாக்கும் பணி தொடக்கம்
ஈரோடு கணபதிபாளையத்தி ல்”ஒளிரும் ஈரோடு” சார்பில் “ஊருக்கு ஒரு குளம்” திட்டத்தின் கீழ் புதிய குளம் உருவாக்கும் பணி தொடக்கம்
ஈரோடு மாவட்டம் , மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றியம் , புஞ்சைகாளமங்கலம் , கம்பத்தீஸ்வரர் குளத்தினை,மாவட்ட ஆட்சித் தலைவர் கிருஷ்ணனுண்ணி, ஒளிரும் ஈரோடு ஃபவுண்டேஷனின் “ ஊருக்கு ஒரு குளம் ” திட்டத்தின் கீழ் ரூ.15.00 இலட்சம் மதிப்பீட்டில் புதிய குளம் உருவாக்கும் பணியினை தொடங்கி வைத்தார்.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகளில் , குடிநீர் மற்றும் விவசாய ஆதாரங்களை மேம்படுத்திட வேண்டும் என்ற நோக்கத்தில் ஒளிரும் ஈரோடு ஃபவுண்டேஷனின் நீர் மேலாண்மைக் குழு திட்டங்களில் குளம் , குட்டை , தடுப்பணை,ஓடை , ஏரி,கால்வாய் போன்ற நீர்நிலைகளை தனது நிதியிலிருந்து தூர்வாரி ஆழப்படுத்தி , நீர்நிலைகளில் அதிக அளவில் நீரைத்தேக்கும் பணிகளை செய்து வருகின்றது .
இத்திட்டத்தின் மூலம் இதுவரை 47 நீர்நிலைப்பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ளது . அதனைத் தொடர்ந்து, மொடக்குறிச்சி வட்டாரம் , புஞ்சைகாளமங்கலம் “ அ ” கிராமம் , கரூர் பிரதான சாலையில் , கணபதிபாளையம் அருகில் அமைந்துள்ள கம்பத்தீஸ்வரர் குளத்தினை புதிதாக உருவாக்கும் பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது .
இக்குளத்தின் மொத்த பரப்பளவு சுமார் 22,73 ஏக்கர் ஆகும் . இதில் சுமார் 14 ஏக்கர் பரப்பளவில் மட்டுமே குளம் இருந்து வந்தது , இக்குளமானது கடந்த 2018 – ம் ஆண்டு ஆழப்படுத்தப்பட்டது . அந்தக் குளத்தை சார்ந்த மற்றொரு பகுதியில் கால்நடை மருத்துவமனை இருந்து வந்தது.அது தற்போது அப்புறப்படுத்தப்பட்டது.
அவ்வி டத்தில் 48-வது நீர்நிலைப்பணியாக ஒளிரும் ஈரோடு ஃபவுண்டேஷனின் “ ஊருக்கு ஒரு குளம் ” திட்டத்தின் கீழ் சுமார் 7 ஏக்கர் பரப்பளவில் “ புதிய குளம் ” உருவாக்கப்பட உள்ளது.இவ்விழாவில் கூடுதல் ஆட்சியர் ( வளர்ச்சி ) / மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மதுபாலன், மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றியம் தலைவர் கணபதி, புஞ்சைகாளமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் திலகவதி உதயசூரியன், ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் உமாமகேஸ்ரி , வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுசீலா, ரமேஷ் , உதவி பொறியாளர் பர்கத் , ஒளிரும் ஈரோடு ஃபவுண்டேஷன் தலைவர் சின்னசாமி, நீர் மேலாண்மைக் குழு தலைவர் சண்முகம்,செயலர் கணேசன், எம்.சி.ஆர் வேஷ்டிகள் நிறுவனத்தின் உரிமையாளர் ராபின், துறை சார்ந்த அரசு அலுவலர்கள், மற்றும் ஊர்பொதுமக்கள் ஏராளமானோர் ஆகியோர் கலந்து கொண்டனர்.