மாபெரும் இலவச கண்பரிசோதனை முகாம்
.
சென்னை தண்டையார்பேட்டை சேனியம்மன் கோவில் தெருவில் உள்ள குலேச்சா நிவாஸ் இல்லத்தில் மஹாவீர் இண்டர்நேஷ்னல் சென்னை மற்றும் எம்.என்.கண் மருத்துவமனை,குலேச்சா குடும்பத்தின் தாயார் சுமித்தா,சுனில் குமார்,பிரசாந் குமார்,அபிஷேக்,பிரதிப்,குலேச் சா ஆகியோர் ஆதரவுடன் இணைந்து இலவச கண் பரிசோதனை,கண் புரை அறுவை சிகிச்சை மற்றும் மூக்கு கண்ணாடி வழங்கும் முகாமினை நடத்தினர்.
மாதாந்திர இலவச கண் பரிசோதனை சிறப்பு முகாமில் பொதுமக்களுக்கு சிறந்த மருத்துவர்களால் நவீன மருத்துவ கருவிகள் கொண்டு கண்களில் ஏற்பட்டுள்ள குறைபாடுகள் கண்டறியபட்டு மூக்கு கண்ணாடிகள் வழங்கி,நோயாளிகளுக்கு இலவச கண் புரை அறுவை சிகிச்சை மேற்கொள்ளபட்டது.
இம்முகாமில் நிருவனர் எஃப்.சி ஜெயின்,செயலாளர் நிரன்ஜன் சோலாங்கி,பொருலாளர் பசன்ட் பர்டியா,இணை செயலாளர் ஹீராலாள் ஜெயின் கோத்தாரி,இயக்குனர் பிரவின் ஜெயின்,லலித் ஜெயின்,பரனி,லோகநாதன் உள்ளிட்டோர் பங்கேற்று முகாமை சிறப்பித்தனர்.
இம்முகாமில் பல்வேறு பகுதியில் இருந்து பொதுமக்கள் வருகைதந்து கண்பரிசோதனை செய்துகொண்டு பயண்பெற்றனர்.கண் குறைபாடுகள் கண்டறியப்பட்ட நோயாளிகளை கண் புரை அறுவை சிகிச்சைக்கு அனுப்பிவைக்கபட்டனர்.