சென்னை ராயபுரம் வார்டு49 பி.ஏ.என் இராஜரத்தினம் 5வது தெருவில் நடைபாதையில் குப்பை தொட்டியில் குப்பைகள் வழிந்து, குப்பைகள் சிதறி துற்நாற்றம் வீசி வருவதோடு கொசுக்கள் உற்பத்தி அதிக பெருக்கம்
சென்னை ராயபுரம் வார்டு49 பி.ஏ.என் இராஜரத்தினம் 5வது தெருவில் நடைபாதையில் குப்பை தொட்டியில் குப்பைகள் வழிந்து, குப்பைகள் சிதறி துற்நாற்றம் வீசி வருவதோடு கொசுக்கள் உற்பத்தி அதிக பெருக்கம் அடைந்துள்ளது.இதனால் அப்பகுதி குடியிருப்ப்புவாசிகள் பகல்,இரவு நேரங்களில் கொசு தொல்லையினால் மிகுந்த அவதிகுள்ளாகி வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.
பி.ஏ.என் இராஜரத்தினம் 5வது தெரு மற்றும் கிரேஸ் கார்டன் பகுதியில் சென்னை மாநகராட்சி முறையாக கொசு புகை மருந்து அடிப்பதில்லை என பொதுமக்கள் குற்றம்சட்டினர்.
எனவே சம்மந்தபட்ட மாநகராட்சி அதிகாரிகள் கவனத்தில் கொண்டு உடனடியாக பி.ஏ.என் இராஜரத்தினம் 5வது தெருவில் நடைபாதையில் சிதறிகிடக்கும் குப்பைகளை அகற்றி பி.ஏ.என் இராஜரத்தினம் தெரு,கிரேஸ் கார்டன் ஆகிய பகுதியில் முறையாக கொசு புகை மருந்து அடிக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.