ஓடிடியில் வெளியாகும் அமலா பாலின் கடாவர்

Loading

மலையாள இயக்குனர் அனூப் எஸ். பணிக்கர் இயக்கத்தில் அமலாபால் கதாநாயகியாக நடித்துள்ள திரைப்படம் ‘கடாவர்’. இதில் ஹரிஷ் உத்தமன், முனீஸ்காந்த், திரிகன் (ஆதித் அருண்), பசுபதி, நிழல்கள் ரவி, வினோத் சாகர், வேலு பிரபாகர், ஜெய ராவ், அதுல்யா ரவி, ரித்விகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். அபிலாஷ் பிள்ளை வசனம் எழுதியுள்ள இந்த படத்திற்கு அரவிந்த் சிங் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இப்படத்திற்கு ரஞ்சின் ராஜ் இசையமைக்க ஷான் லோகேஷ் பட தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார்.

கிரைம் த்ரில்லர் ஜானரில் தயாராகி இருக்கும் இந்த படத்தில் தடயவியல் துறை நிபுணரான பத்ரா என்ற கதாபாத்திரத்தில் நடிகை அமலா பால் நடித்துள்ளார். இப்படம் டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் பிரத்யேகமாக வெளியிடப்படுகிறது. அமலா பாலின் இந்த புதிய கதாபாத்திரம் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.

0Shares

Leave a Reply