அதிவேகமாக, முறையான பாதுகாப்பின்றி, ஆவணங்கள் இல்லாமல் வாகனம் ஓட்டுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை… காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை..
கன்னியாகுமரி மாவட்டம் :- மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வைத்து நேற்று முன்தினம் (20.07.2022) லாரி உரிமையாளர்கள் அசோசியேஷன், கல்குவாரி உரிமையாளர்கள் ஆகியோர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் D.N.ஹரி கிரன் பிரசாத் IPS தலைமையில் கூட்டம் நடைபெற்றது. இதில் 60 க்கு மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் பேசிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் லாரி உரிமையாளர் அசோசியேசன், கல்குவாரி உரிமையாளர்கள் அவர்களின் கீழ் பணியாற்றும் லாரி ஓட்டுநர்கள், அதிவேகமாக, முறையான பாதுகாப்பின்றி, முறையான ஆவணங்கள் இல்லாமல் வாகனம் ஓட்டுவதாக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் வந்த வண்ணம் உள்ளது. இதனால் சிலசமயங்களில் விபத்துக்கள் ஏற்படுகின்றது.
இனிமேல் இவ்வாறு லாரி ஓனர் அசோசியேசன், கல்குவாரி உரிமையாளர்கள் அவர்களிடம் பணியாற்றும் லாரி ஓட்டுனர்கள் அதிவேகமாக, முறையான பாதுகாப்பின்றி, முறையான ஆவணங்கள் இல்லாமல் வாகனம் ஓட்டினால் காவல்துறை மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கும் என்றும் கூறினார்..