சித்தார்த்-அதிதிராவ் காதல்?

Loading

நடிகர் சித்தார்த் தமிழ், தெலுங்கு, இந்தி என்று மூன்று மொழிகளில் நடித்து ரசிகர்களுக்கு அறிமுகமானவர். அவர் சமீபத்தில், தான் திரைத்துறையை விட்டு விலக இருப்பதாகவும் இனி படங்களில் நடிப்பதைக் குறைத்துக்கொண்டு தொழிலில் கவனம் செலுத்த இருப்பதாகவும் கூறியிருந்தார். இது பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் மும்பை ஊடகங்களில் நடிகர் சித்தார்த் நடிகை அதிதிராவ் இருவரும் காதலிப்பதாக தகவல்களை எழுதி வருகிறார்கள். சமீபத்தில் அவர்கள் ஓட்டலில் சந்தித்துப் பேசிவிட்டு ஒரே காரில் சென்ற வீடியோவையும் வெளியிட்டு வைரலாக்கி வருகிறார்கள். அதிதிராவ் மணிரத்னம் இயக்கிய காற்று வெளியிடை படத்தில் நடித்து ரசிகர்களுக்கு அறிமுகமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

0Shares

Leave a Reply