தூத்துக்குடி பனிமய மாதா பேராலயத்தை சுற்றியுள்ள தெற்குகாட்டன் ரோடு, ஜார்ஜ் ரோடு உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் மழைநீர் வடிகால், சாலைப்பணிகளை விரைந்து முடித்திடமாநகராட்சி மேயர் ஜெகன்பெரியசாமி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்

Loading

தூத்துக்குடி பனிமய மாதா பேராலயத்தை சுற்றியுள்ள தெற்குகாட்டன் ரோடு, ஜார்ஜ் ரோடு உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் மழைநீர் வடிகால், சாலைப்பணிகளை விரைந்து முடித்திடமாநகராட்சி மேயர் ஜெகன்பெரியசாமி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.*

தூத்துக்குடி மாநகரில் உலக சிறப்புபெற்ற பசிலிக்கா பேராலயமான பனிமய மாதா பேராலஆலயத்திருவிழா ஆண்டுதோறும் ஜூலை 26ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி ஆகஸ்ட் 5ம் தேதி வரை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. திருவிழாவிற்கு மாவட்டம் முழுவதும் மட்டுமின்றி, வெளியூர், வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்வது வழக்கமாகும்.

இந்நிலையில், தூத்துக்குடி மாநகராட்சியில் ரூ.1000கோடி திட்ட மதிப்பீட்டில் ஸ்மார்ட் சிட்டி பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் அடிப்படையில் பனிமய மாதா ஆலயம் மற்றும் ஆலயத்தை சுற்றியுள்ள ரோடுகள், முக்கிய தெருக்களில் மழைநீர் வடிகால்கள் அமைத்தல், கழிவுநீர் கால்வாய்களை மேம்படுத்துதல், புதியதாக தார் சாலை, சிமெண்ட் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இப்பணிகள், ஏற்கனவே தொடங்கி நடைபெற்றுவரும் நிலையில், பனிமய மாதா திருவிழாவிற்கு இன்னும் சில நாட்களே உள்ளன. இதனையறிந்த தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன்பெரியசாமி மாநகராட்சி அதிகாரிகள் குழுவினருடன் ஆலயத்தை சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சிப்பணிகள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது மேயர், திருவிழாவிற்கு இன்னும் சில நாட்களே இருப்பதால் பொதுமக்களுக்கும், பக்தர்களுக்கும் எந்தவிதமான இடையூறுகளும் ஏற்படாத வகையில் அனைத்துப்பணிகளையும் விரைந்து முடித்திடவேண்டும் என்று ஒப்பந்ததாரர்களுக்கு அதிரடியாக உத்தரவிட்டார்.

ஆய்வுப்பணிகள் குறித்து, மாநகராட்சி மேயர் ஜெகன்பெரியசாமி கூறியதாவது, தூத்துக்குடி மாநகரில் அனைத்து மத, இன மக்களும் வழிபடும் கருணைக்கடலாக அன்னை பனிமய மாதா ஆலயம் அமைந்துள்ளது. பனிமய மாதா ஆலய திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இரண்டு வருட கொரோனா கால கட்டத்திற்கு பிறகு இந்த வருடம் நடைபெறும் திருவிழாவினை சிறப்பாக நடத்திட ஆலய நிர்வாகத்தினர் அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

இந்தவகையில், திருவிழாவிற்கு வந்து செல்லும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுத்திட மாநகராட்சி நிர்வாகம் தகுந்த முன்னேற்பாடு பணிகளை மேற்கொண்டு வருகிறது.

இந்தவகையில், வெளியூர்களில் இருந்து வந்து செல்லும் பக்தர்கள் மற்றும் பக்தர்கள் வந்துசெல்லும் வாகனங்களுக்கு இடையூறு இல்லாத வகையில் ஆலயத்தின் சுற்றுப்பகுதியான தெற்கு காட்டன் ரோடு, ஜார்ஜ் ரோடு, தண்டல் சந்து, மறக்குடி தெரு உள்ளிட்ட சுற்றுப்பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை விரைந்து முடித்திடுவதற்கு தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மழைநீர் வடிகால்கள் அமைத்தல், தார் சாலை அமைத்தல் உள்ளிட்ட இப்பணிகளை மாநகராட்சி அதிகாரிகள் நாள்தோறும் தவறாமல் கண்காணித்து பணிகளை விரைவில், தரமாக முடித்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.

முன்னதாக மாநகராட்சி மேயர் ஜெகன்பெரியசாமி, தூத்துக்குடி புதிய பஸ் நிலையத்தில் இருந்து எட்டயபுரம் சாலையில் கலைஞர் அரங்கத்திற்கு அருகே மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளை பார்வையிட்டார்.

அதனைத்தொடர்ந்து, மேயர் ஜெகன்பெரியசாமி குறிஞ்சி நகர் டவர் சாலை பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர், அப்பகுதிகளில் மழைநீர் தேங்கதாவாறு டவர் அருகில் இருக்கும் நான்கு சாலைகளிலும் மழைநீர் வடிகால் குழாய் அமைக்கவும், அவற்றை அருகிலுள்ள மின்மோட்டார் அறையுடன் இணைக்கும்படி பணியாளர்களுக்கு அறிவுறுத்தினார். இதன்மூலமாக வரும் காலங்களில் இப்பகுதிகளில் மழைநீர் தேங்காதவாறு தடுக்க தகுந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று மேயர் ஜெகன்பெரியசாமி பொதுமக்களிடம் தெரிவித்தார்.

ஆய்வின்போது, மேயருடன் உதவியாளர்கள் ரமேஷ், ஜேஸ்பர், பிரபாகர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் உடன் சென்றனர்.
====================

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *