பொன்னியின் செல்வனோடு மோதும் தனுஷ் படம்?

Loading

இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்து வரும் திரைப்படம் ‘நானே வருவேன்’. இந்த திரைப்படத்தை வி கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார். இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.
தனுஷ் இரட்டை வேடத்தில் நடிக்கும் இப்படத்தில் நாயகியாக இந்துஜா நடிக்கிறார். இப்படத்தில் எல்லி அவுரம் என்ற ஸ்வீடன் நாட்டு நடிகை முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். அண்மையில் இதன் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது.
இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததை தனுஷ் சமீபத்தில் சமூக வலைத்தளத்தில் தெரிவித்திருந்தார். இதையடுத்து, நானே வருவேன் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், ‘நானே வருவேன்’ திரைப்படம் மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் -1 திரைப்படம் வெளியாகும் தேதியான செப்டம் 30-ஆம் தேதி ரிலீஸாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இது குறித்து எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் படக்குழு இதுவரை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

0Shares

Leave a Reply