ஹெச்சிஎல் மற்றும் எஸ்ஆர்எஃப்ஐ ஆகியவை அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்தியாவின் ஸ்குவாஷ் சுற்றுச்சூழல் அமைப்பை மாற்றுவதற்கான முயற்சிகளை துரிதப்படுத்துகின்றன
ஹெச்சிஎல் ஸ்குவாஷ் போடியம் திட்டம் சீனியர் மற்றும் ஜூனியர் ஸ்குவாஷ் திறமைகளை வளர்ப்பதற்காக மேம்படுத்தப்பட்டது
ஹெச்சிஎல் நிறுவனம், 11.5 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள உலகளாவிய கூட்டு நிறுவனமான ஸ்குவாஷ் ராக்கெட்ஸ் ஃபெடரெஷன் ஆஃப் இந்தியா (எஸ்ஆர்எஃப்ஐ) உடன் இணைந்து ஹெச்சிஎல் ஸ்குவாஷ் போடியம் திட்டத்தின் ஒரு பகுதியாக அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்தியாவில் ஸ்குவாஷ் சுற்றுச்சூழல் அமைப்பை கணிசமாக மேம்படுத்துவதற்கான புதிய முயற்சிகளை இன்று அறிவித்துள்ளது. இந்த பன்முனை திட்டம் தற்போதுள்ள சீனியர் மற்றும் ஜூனியர் ஸ்குவாஷ் வீரர்களை வளர்ப்பதோடு, காமன்வெல்த் மற்றும் ஆசிய விளையாட்டு போட்டிகள் உள்பட முக்கிய சர்வதேச நிகழ்வுகளில் போடியத்தில் சாதிப்பதற்கு அவர்களுக்கு உதவும். இந்த திட்டம் பயிற்சி தரத்தை மேம்படுத்தவும், நாட்டின் அடுத்த தலைமுறை ஸ்குவாஷ் வீரர்களை அடிமட்ட முன்முயற்சிகள் மூலம் ஊக்குவிக்கவும் அடையாளம் காணவும் உதவும்.
ஹெச்சிஎல் ஸ்குவாஷ் போடியம் திட்டம் பல முயற்சிகளை வழங்கும்: காமன்வெல்த் விளையாட்டு 2022 மற்றும் உலக ஜூனியர் சாம்பியன்ஷிப்பிற்கான உயர்-செயல்திறன் முகாம்: கிறிஸ் வாக்கர், கிரிகோரி கௌல்டியர் & செபாஸ்டின் போன்மலைஸ் உள்ளிட்ட சிறந்த தேசிய மற்றும் சர்வதேச பயிற்சியாளர்களுடன் சீனியர் மற்றும் ஜூனியர்களுக்கான இரண்டு வார செயல்திறன் முகாம் ஜூலை 11 முதல் 25 வரை நடைபெறும். இந்த முகாம்கள் விளையாட்டு உத்தி மற்றும் தந்திரோபாயங்கள், வலிமை, கண்டிஷனிங் மற்றும் ஊட்டச்சத்து ஆகியவற்றை மேம்படுத்த உதவும். விளையாட்டு அறிவியலை மேம்படுத்தி, ஒவ்வொரு வீரருக்கும் தனிப்பயனாக்கப்பட்ட வழிகாட்டுதலை வழங்குவதோடு, அவர்கள் சிறப்பாக செயல்பட உதவுவதற்காகவும் இந்த முகாம்களின் போது தனிப்பட்ட வீரர் மதிப்பீட்டு அறிக்கைகள் உருவாக்கப்படும். இங்கிலாந்தை சேர்ந்த அனுபவம் வாய்ந்த பிசியோதெரபிஸ்ட் கிரேம் எவரார்ட், ஜூலை 25ஆம் தேதி தொடங்கும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் வீரர்களுடன் வருவார்…