ஸ்ரீ பத்துமலை முருகன் ஆலய கும்பாபிஷேகம்
புதுவை குருமாம்பேட் பால் பால் பண்ணை அருகே உள்ள தமிழக பகுதியான பெரம்பை ஐஸ்வர்யா நகரில் நித்தியானந்தா சீடரான பாலசுப்பிரமணியம் என்பவர் மலேசியா முருகன் கோவில் போல் இங்கு கட்டியுள்ளார். 27 அடி உயரத்தில் முருகன் சிலை பிரம்மாண்டமாக கட்டி முடிக்கப்பட்டு கோவில் இதற்கு ஸ்ரீ பத்துமலை முருகன் ஆலயம் என பெயர் வைத்து கும்பாபிஷேகம் சிறப்பான முறையில் நடத்தினார். கோவில் நுழைவாயில் நித்தியானந்தா உருவம் கொண்ட 12 அடி உயரத்தில் பிரம்மாண்ட சிலை உருவாக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. சிலையை பார்த்த பொதுமக்கள் காவல்துறையினர் வியப்புடன் பார்த்தனர்.