அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி கே.பழனிச்சாமி தேர்வு திருவண்ணாமலையில் அதிமுகவினர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
![]()
திருவண்ணாமலை ஜூலை.12- அதிமுக தற்காலிக பொதுச் செயலாளராக எடப்பாடி கே.பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்பட்டதையட்டி திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் 16 கால் மண்டபம் முன்பு நேற்று அதிமுகவினர் பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் கொண்டாடினர். அதிமுக பொதுக்குழு சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் அதிமுக தற்காலிக பொதுச் செயலாளராக எடப்பாடி கே.பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதையட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வகையில் தமிழகம் முழுவதும் அதிமுகவினர் பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் கொண்டாடினர். அதன்படி திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் 16 கால் மண்டபம் முன்பு அதிமுக சார்பில் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுநரணி செயலாளர் பி.சுனில்குமார் மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி செயலாளர் டிஸ்கோ எஸ்.குணசேகரன் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் பீரங்கி ஜெ.வெங்கடேசன் ஆகியோரது தலைமையில் அதிமுகவினர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
அப்போது கட்சி தொண்டர்கள் சிறுவியாபாரிகள் ஆட்டோ ஓட்டுநர்கள் பேருந்து பயணிகள் பொதுமக்கள் ஆகியோருக்கு அதிமுக நிர்வாகிகள் இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இதில் அம்மாபேரவை மாவட்ட துணை செயலாளர் போர்மன்னன் கே.ராஜா அம்மா பேரவை துணை செயலாளர் ரேடியோ எஸ்.ஆறுமுகம் மற்றும் நிர்வாகிகள் பர்குணகுமார் கே.ராமமூர்த்தி ஜவுளி கோபி ஜொல்லு கோவிந்தன் சந்தரா பிரகாஷ் டிஏ அண்ணாமலை டி.திருமணி டி.செல்வராஜ் சத்யா ஜெ.ஆசிஷ் மண்ணெண்ணை மாணிக்கம் வைத்தி மீசை விஜயகுமார் அன்பு சகாப்தீன் அசோக் அண்ணாமலை பச்யைப்பன் சுரேஷ் இன்பபிரகாஷ் எஸ்.டி.தமிழ்ச்செல்வன் வேளானந்தல் பிரபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

