பண்ருட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் கிராம நிர்வாகிகள் உள்ளிருப்பு போராட்டம்

Loading

பண்ருட்டி ஜூலை.13 -தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்கத்தினர் வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தினை மாநில செயலாளர் பக்கிரி சாமி. தலைமையில் மாவட்ட செயலாளர்கள் திருமால் வளவன். மாவட்ட தலைவர் கார்த்திகேயன். மாவட்டத் துணைத் தலைவர் பழனிசாமி. வட்டத் தலைவர் மைக்கேல் ராஜ். முன்னிலையில் உள்ளிருப்பு போராட்டம் நடை பெற்றது.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டம் வல்லம் கிராம நிர்வாக அலுவலர் குமாரசாமி. மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய நபரை கைது செய்யப்படாத கண்டித்து குற்றவாளி கைது செய்யப்படும் வரை போராட்டங்களை நடத்துவதும் என்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. பண்ருட்டி வட்டத்தில் பணிக்கு சென்றால் பாதுகாப்பு இல்லை என்ற வட்டாட்சியர் அலுவலகத்தில் தஞ்சம் புகுந்து போராட்டம் கிராம நிர்வாக அலுவலர் போராட்டம் நடத்தினர்.

குற்றவாளி மீது நடவடிக்கை எடுக்கப்பட வில்லை மாவட்ட அளவிலான போராட்டங்கள் நடைபெறும் என கோரிக்கை வைத்தனர். இதனை தொடர்ந்து அடுத்த கட்ட பின்பு தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் பண்ருட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் போராட்டத்தில் வட்டாட்சியர் மற்றும் காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். போராட்டத்தை சுமூகமாக கைவிடப்பட்டது.போராட்டங்கள் மாநில அளவில் முன்னெடுக்கப்படும் என்று கோரிக்கை வைத்தனர்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *