புதுச்சேரியில் அம்மா அறக்கட்டளை மற்றும் ரோட்டரி கிளப் ஆஃப் பாண்டிச்சேரி டிவைன் சிட்டி இணைந்து ஏற்பாடு செய்திருந்த இளைஞர்கள் பயன் பெரும் வகையில் மெகா வேலை வாய்ப்பு முகாம்

Loading

புதுச்சேரியில் அம்மா அறக்கட்டளை மற்றும் ரோட்டரி கிளப் ஆஃப் பாண்டிச்சேரி டிவைன் சிட்டி இணைந்து ஏற்பாடு செய்திருந்த இளைஞர்கள் பயன் பெரும் வகையில் மெகா வேலை வாய்ப்பு முகாம் உப்பளம் இந்திராகாந்தி உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இதில் 40-க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் பங்கேற்றன. புதுச்சேரி கிழக்கு மாநில அ.தி.மு.க. செயலாளரும், முன்னாள் சட்டமன்ற கட்சித் தலைவருமான அன்பழகன் கலந்து கொண்டு வேலைவாய்ப்பு முகாமை தொடங்கி வைத்தார். இந்த வேலை வாய்ப்பு முகாமில் 1000க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பயனடைந்தனர். இந்த வேலை வாய்ப்பு முகாமை அம்மா அறக்கட்டளை நிறுவனர் டாக்டர் பிரபாகரன் ஏற்பாடு செய்திருந்தார்.

இந்நிகழ்ச்சியில் முன்னாள் மாநில செயலாளர் நடராசன் EX.MLA, கிழக்கு மாநில அம்மா பேரவை செயலாளர் பாஸ்கர் EX.MLA, கிழக்கு மாநில கழக அவைத் தலைவர் அன்பானந்தம், மாநில இணைச் செயலாளர்கள் வீரம்மாள், கணேசன் Ex. Mc, துணைச் செயலாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, நாகமணி, மாநில கழக பொருளாளர் ரவி பாண்டுரங்கன், புதுச்சேரி மேற்கு மாநில அம்மா பேரவை செயலாளர் சுத்துக்கேணி பாஸ்கர், புதுச்சேரி நகர கழக செயலாளர் அன்பழக உடையார், மாநில அண்ணா தொழிற்ச்சங்க செயலாளர் பாப்புசாமி, கிழக்கு மாநில செயலாளர் ஞானவேல் அமைப்புசாரா ஓட்டுனர் அணி செயலாளர் செல்வம் மற்றும் பலர் உடன் இருந்தனர் .

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *