மெட்ரோபோலிஸ் ஹெல்த்கேர் லிமிடெட் புதிய முயற்சியாக செல் மூலம் மூலக்கூறு மரபியல் நுட்பம் மூலம் சிறப்பு நோயியல் கண்டறியும் வசதியை ஏற்படுத்தியுள்ளது
சென்னை,
மக்களுக்குத் தொடர்ந்து உயர் தரத்திலான நோய் கண்டறியும் பரிசோதனை முறைகளைக் கட்டுபடியாகும் கட்டணத்தில் அனைவருக்கும் அளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ள மெட்ரோபோலிஸ் ஹெல்த்கேர் லிமிடெட் நிறுவனம், இந்தியாவிலேயே முன்னணி நோய் கண்டறியும் மையங்களில் முன்னணியில் திகழ்கிறது. இந்நிறுவனம் முன்னேறிய நோய் கண்டறியும் பரிசோதனை முறையை செல்லிலிருந்து மூலக்கூறு மரபியல் மூலம் உயர்வகையிலான நோய் கண்டறியும் முறையை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய செல் முறையில் மெட்ரோபோலிஸ் பல்வேறு சிறப்பு பரிசோதனைகளை கருவுற்றிருக்கும்போதும், புற்றுநோய், பரவும் நோய்கள் மற்றும் உறுப்பு மாற்று நிர்வாக முறை மூலம் செயல்படுத்தும்.
மெட்ரோபோலிஸ் பிரத்யேக செல் நுட்பம் நோய் கண்டறியும் முறை குறித்து திருமிகு அமீரா ஷா, மேம்பாட்டாளர் மற்றும் நிர்வாக இயக்குநர், மெட்ரோபோலிஸ் ஹெல்த்கேர் லிமிடெட் கூறியதாவது: “இப்புதிய புத்தாக்க முறையை மெட்ரோபோலிஸ் இன்னொவேஷன் செல் பிரிவின் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி மையம் உருவாக்கியுள்ளது. இது அடிப்படையான அறிவியல் ஆராய்ச்சி பின்புலத்தினால் உருவானது. இதன் மூலம் நோயாளியின் நோய் குறித்த விவரங்கள் அனைத்தையும் செல் மூலம் கண்டுபிடித்துவிடலாம்.
இதன் மூலம் நிறுவனத்தின் பிரதான நோக்கமான மிகவும் நம்பகமான அறிவியல் பூர்வமான ஆராய்ச்சி நிறுவனம் என்ற பெயரை எட்டுவதற்கு இதுபோன்ற ஆதாரபூர்வ தகவல், நோய் கண்டறிதலில் நிபுணத்துவம், நேர்மை மற்றும் நோயாளிகளிடம் அணுகும் தன்மை ஆகியவைதான் உதவும் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டுள்ளது. மேலும் நீண்ட கால இலக்காக இதுபோன்ற நோய் கண்டறிதலில் தொடர்ந்து முதலீடு செய்து அறிவியல் ஆராய்ச்சி மூலமும் அதற்குறிய கட்டமைப்பை மேம்படுத்துவதன் மூலம் நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு சேவையாற்ற விரும்புகிறது,’’ என்று குறிப்பிட்டார்.
Attachments area