மதுரை விக்கிரமங்கலம் அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் அரசால் தடை செய்யப்பட்ட நெல்லை கொள்முதல் செய்ய வலியுறுத்தி திமுக ஒன்றிய செயலாளர் மிரட்டுவதாக விவசாயிகள் புகார்
*நடவடிக்கை எடுப்பாரா தமிழக முதல்வர் : விவசாயிகள் கேள்வி*
மதுரை மாவட்டம் விக்கிரமங்கலம் அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் அடியாட்களை வைத்து திமுக ஒன்றிய செயலாளர் மிரட்டுவதாக விவசாயிகள் முதல்வருக்கு கோரிக்ககை, மேலும் இது குறித்து அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது:-
விவசாயிகளின் கடின உழைப்பால் விளைவித்த நெல்லை தமிழக அரசின் சார்பில் நேரடியாக கொள்முதல் செய்யப்பட்டு வரும் நிலையில் மதுரை மாவட்டம் விக்கிரமங்கலம் பகுதியில்
கடந்த 20 நாட்களுக்கு மேலாக அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது.இதன் மூலம் விவசாயிகள் கோடை காலத்தில் தாங்கள் அறுவடை செய்த நெல்லை முறைப்படி அரசின் கொள்முதல் நிலையத்தில் செலுத்தி பணம் பெற்று வந்த நிலையில் தற்சமயம் செல்லம்பட்டி திமுக ஒன்றிய செயலாளர் சுதாகரன் என்பவர் தமிழக அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள குறிப்பிட்ட நெல்லை தன் அதிகாரத்தை பயன்படுத்தி கொள்முதல் செய்ய வற்புறுத்தி அதிகாரிகள் மற்றும் விவசாயிகளை அடியாட்களை வைத்து மிரட்டுவதாக அப்பகுதி விவசாயிகள் குற்றம்சாட்டி வருகின்றனர். மேலும் இது சம்பந்தமாக கடந்த மே மாதம் வீரபாண்டி மற்றும் விண்ணகுடி கண்ணன் ஆகியோர் மண்டல மேலாளர் மற்றும் துணை ஆட்சியருக்கு புகார் மனு ஒன்றினை அனுப்பியுள்ளார். அப்போது அரசு அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து 16 நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளின் நெல்களை மட்டும் கொள்முதல் செய்ய வேண்டும், வியாபாரிகளின் நெல்லை கொள்முதல் செய்ய கூடாது என வலியுத்தியும், கடந்த அறுவடை காலத்தில் செல்லம்பட்டி ஒன்றியத்தில் 11 நெல் கொள்முதல் நிலையங்களை மாவட்ட நிர்வாகம் தடை செய்திருந்தது. அவ்வாறு தடை செய்யப்பட்ட கொள்முதல் நிலையத்திற்கு உட்பட்ட கிராமங்களில் இருந்து வியாபாரிகளின் நெற்களை விக்கிரமங்கலம் கொள்முதல் நிலையத்தில் கொள்முதல் செய்ய வேண்டும் என்று அதிகாரிகளை மிரட்டி வருகிறார். இதனால் இப்பகுதி விவசாயிகளின் நெல் பெருமளவு தேங்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழக அரசின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படும் சூழ்நிலை உருவாகி உள்ளது. எனவே இப்பகுதி விவசாயிகளின் கோரிக்கையினை கருத்தில் கொண்டு மதுரை மாவட்ட ஆட்சியர் தமிழக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்றும், நேரடியாக விசாரணை செய்து சம்பந்தப்பட்ட நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளனர்.