மனித பாதுகாப்பு அமைப்பு சார்பில் வேலைவாய்ப்பு முகாம் :

Loading

பண்ருட்டி. ஜூலை.05- கடலூர் மாவட்டம் பண்ருட்டி லட்சுமி நாராயணபுரம் ஆதிதிராவிடர் நலப்பள்ளியில் மனித பாதுகாப்பு அமைப்பு சார்பில் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டது.

கடலூர் மாவட்டம் மற்றும் தென் சென்னை மாவட்டம் இணைந்து நடத்திய வேலைவாய்ப்பு முகாமில் பல்வேறு இளைஞர்கள் கலந்து கொண்டு வேலைவாய்ப்பினை பெற்றுச் சென்றனர்.

மனித பாதுகாப்பு அமைப்பு நிறுவன தலைவர் சந்திரசேகரன் அவர்களின் ஆலோசனைப் பேரில்

மனித பாதுகாப்பு அமைப்பு கடலூர் மாவட்ட தலைமை அமைப்பாளர் பிரகாஷ் மாவட்ட துணை அமைப்பாளர் ஆனந்தராஜ் மற்றும் இணை அமைப்பாளர் விஜயன் இவர்களின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இந்நிகழ்வில்

தென்சென்னை மாவட்ட தலைமை அமைப்பாளர் டாக்டர் லயன் பிஜிகுமார் , மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் டாக்டர் லயன் சுஜின் , மாவட்ட அமைப்பாளர் வி கோ சூர்யா, மாநில துணை அமைப்பாளர் டிஎன் சுதாமன், மாநில செயற்குழு உறுப்பினர் வீராச்சாமி, மண்டல சிறப்பு அமைப்பாளர் மணிகண்டன், மண்டல அமைப்பாளர் செந்தில்குமார், காட்டுமன்னார்குடி மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பகவத்சிங், மற்றும் கடலூர் மாவட்ட நகர ஒன்றிய கிளை நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

வேலை வாய்ப்பு முகாமில் கலந்துகொண்ட 50க்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.

0Shares

Leave a Reply