இபிஎஸ் -ஒபிஎஸ் மோதல் மேலும் வெடிக்கிறது உங்கள் பதவியும் செல்லாது கடிதமும் செல்லாது இபிஎஸ் பதிலடியால் பரபரப்பு
சென்னை, ஜூலை
திமுகவில் ஓபிஎஸ் – இபிஎஸ் இடையேயான மோதல் மேலும் வலுக்கிறது, உங்கள் பதவி ரத்தாகி விட்டது நீங்கள் அனுப்பிய கடிதமும் செல்லாது என்று ஓபிஎஸ்க்கு இபிஎஸ் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
ஓருங்கிணைப்பாளர் பதவி ரத்தானதால் உங்கள் கடிதம் செல்லாது என்று ஓபிஎஸ்க்கு இபிஎஸ் பதிலடி கொடுத்துள்ளார்,
உள்ளாட்சித்தேர்தலில் அதிமுக வேட்பாளர்களுக்கு கடிதம் கொடுக்க வேண்டும் என்று கூறி அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ்க்கு கடிதம் அளித்திருந்தார், இது குறித்து ஒபிஎஸ்க்கு இபிஎஸ் தலைமைநிலைய செயலாளர் என்ற பொறுப்பில் அளித்துள்ள பதில் கடிதம் வருமாறு: ல
கடந்த 23 ம்தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் 1.12.21 அன்று நடைபெற்ற செயற்குழு மூலம் கொண்டு வரப்பட்ட சட்டத்திருத்தங்கள் அங்கீகரிக்கப்படவில்லை, ஆதலால் சட்டத்திருத்தங்கள் காலாவதி ஆகி விட்டது, எனவே அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்ற உணர்வில் தாங்கள் எழுதியுள்ள கடிதம் செல்லத்தக்கதல்ல.
மேலும் உள்ளாட்சி அமைப்புகளில் தற்போது காலியாக இருக்கும் பதவிகளுக்கு நடைபெற உள்ள தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்வதற்கு கடைசி நாள் 27 ம்தேதி முடிவுற்று விட்டது இத்தனை நாட்கள் பொறுத்திருந்து கட்சியின் வேட்பாளர்களை அதிகாரப்பூர்வமாக அறிவிக்காத நிலையிலும் 27 ம்தேதி கூட்டப்பட்ட தலைமைக்கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்திற்கு தாங்கள் உட்பட அனைவருக்கும் முறையாக தகவல் தெரிவிக்கப்பட்டு மொத்தம் 74 பேரில் 65 பேர் கலந்துகொண்டனர், 4 பேர் உடல் நிலை சரியி்ல்லை என்று தகவல் தெரிவித்திருந்தனர், தாங்கள் அந்த கூட்டத்தை புறக்கணித்த நிலையில் தற்போதைய தங்களின் கடிதம் ஏற்புடையதாக இல்லை, அதே போல் நாம் இருவரும் கூட்டாக அழைப்பு விடுத்த அதிமுகவின் பொதுக்குழுவை நடத்த விடாமல் தடுத்து நிறுத்துவதற்காக ஆவடி காவல் ஆணையருக்கு கடிதம் மூலம் புகார் அளித்தும் நீதிமநன்றங்களின் மூலம் வழக்கு தாக்கல் செய்தும் அதிமுகவை செயல்படாத நிலைக்கு கொண்டு செல்ல அனைத்து பணிகளை செய்து விட்டு தற்போது இப்படி ஒரு கடிதத்தை எனக்கு அனுப்புவது ஏற்புடையதாக இள்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறேன், இவ்வாறு அந்த கடிதத்தில் இபிஎஸ் தெரிவித்துள்ளார்,