சென்னை விமான நிலையத்தில் ரூ.10 லட்சம் வெளிநாட்டு பணம் பறிமுதல்
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து கொழும்புக்கு விமானத்தில் செல்ல வந்த பயணிகளை விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகள் கண்காணித்தனர். அப்போது இலங்கையை சேர்ந்த பெண்ணை சந்தேகத்தின்பேரில் நிறுத்தி விசாரித்தனர். அதிகாரிகளிடம் அவர் முன்னுக்குபின் முரணாக பேசியதால் அவரது உடைமைகளை சோதனை செய்தனர்.
அதில், ஆடைகளுக்குள் கட்டுக்கட்டாக சவுதி ரியால்கள் மறைத்து வைத்து இருப்பதை கண்டுபிடித்தனர். அவரிடம் இருந்து ரூ.10 லட்சம் மதிப்புள்ள சவுதி ரியால்களை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனா். அது ஹவாலா பணமா? என இலங்கை பெண்ணிடம் சுங்க இலாகா அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.