ஜான்வி கபூருக்கு கணவராக தகுதிகள்  தனது வருங்கால கணவர் எப்படி இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார் மறைந்த ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர்

Loading

. மறைந்த ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் இந்தி படங்களில் நடித்து வருகிறார். அவரது நடிப்பில் வந்த குஞ்சன் சக்சேனா த கார்கில் கேர்ள் படம் பாராட்டை கொடுத்தது. தற்போது 2 படங்களில் நடித்து முடித்து விட்டு மேலும் 2 புதிய படங்கள் கைவம் வைத்து நடித்து வருகிறார்.
சமூக வலைதளத்தில் அடிக்கடி கவர்ச்சி படங்களை பகிர்ந்து ரசிகர்களுக்கு நெருக்கமாகி உள்ளார். தனது வருங்கால கணவர் எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து ஜான்வி கபூர் அளித்துள்ள பேட்டியில், ”நான் இதுவரை யாரையும் காதலிக்கவில்லை. திருமணத்தின் மீது எனக்கு விருப்பம் உள்ளது. என்னை திருமணம் செய்து கொள்பவர் நான் செய்யும் வேலைகளை நேசிக்க வேண்டும். அவருக்கு நன்றாக நகைச்சுவை உணர்வு இருக்க வேண்டும். எப்போதும் என்னை சிரிக்க வைத்துக் கொண்டே இருக்க வேண்டும். எந்த நேரமும் ஏதோ ஒரு விஷயத்தை எனக்கு கற்பித்த படி என்னை உற்சாகமாக வைத்திருக்க வேண்டும். இப்படிப்பட்ட குணங்கள் இருப்பவரை நான் கணவராக தேர்வு செய்வேன். நான் ஸ்ரீதேவியின் மகள் என்பதால் சினிமாவில் எளிதாக வர முடிந்தது. ஆனால் யாராக இருந்தாலும் திறமையை நிரூபித்தால்தான் நிலைத்திருக்கமுடியும்” என்றார்.

0Shares

Leave a Reply