அசோசியேசன் ஆப் ஆல் டெக்ஸ்டைல் பிராசர்ஸ் ஈரோடு மற்றும் நாமக்கல் மாவட்டம் சார்பாக  புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா

Loading

அசோசியேசன் ஆப் ஆல் டெக்ஸ்டைல் பிராசர்ஸ் ஈரோடு மற்றும் நாமக்கல் மாவட்டம் சார்பாக ஈரோடு தனியார் மண்டபத்தில் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று தமிழக முதல் அமைச்சராக பொறுப்பேற்றுள்ள முதலமைச்சர்
மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு சங்கத்தின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவன தலைவர், திமுக கொள்கை பரப்பு இணைச் செயலாளர்,திமுக மாநகரச் செயலாளர், மாநகராட்சி மண்டல குழு தலைவர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், முன்னாள் மேயர்,மாமன்ற உறுப்பினர்கள்  மற்றும் பலர் கலந்து கொண்டனர். மேலும் சங்கத்தின் நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு விழாவினை சிறப்பித்தனர்.
0Shares

Leave a Reply