எடப்பாடியின் ஒற்றைத்தலைமைக்கு எதிராக செயல்படுவதை தொண்டர்கள் ஏற்க மாட்டார்கள் ஓபிஎஸ் மீது  ஜெயகுமார் கடும்காட்டம்

Loading

 

சென்னை, ஜூன் – 22

எடப்பாடியின் ஒற்றை தலைமைக்கு எதிராக நீதிமன்றத்திற்கு செல்வதையும் கடிதம் எழுதுவதையும் அதிமுக தொண்டர்கள் ஏற்க மாட்டார்கள் என்று மாஜி அமைச்சர் ஜெயகுமார் கூறியுள்ளார்

 

சென்னை கீரின்வேஸ் சாலையில்  அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்த பின்னர் முன்னாள் அமைச்சர் .ஜெயகுமார் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி..

 

 

மேல் மட்டத்திலிருந்து கீழ் மட்டம் வரை எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு இந்த அடிப்படையில் எடப்பாடிக்கு நேரில் வந்து ஆதரவு தெரிவிக்கின்றனர்,  எனவே அதிமுகவிற்கு ஒற்றை தலைமைதான் வேண்டும் என்று 100 சதவீதம்  பேர் ஏற்றுக்கொள்கிறார்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டதுஓபிஎஸ்  எழுதிய கடிதம் எப்படி பத்திரிகையில் கசிந்ததுஅப்படி என்றால் இங்கே வந்து கடிதம் அளித்துவிட்டுபத்திரிகையில் ஒரு கட்சியின் ரகசியத்தை,கட்சியின் நலன் பாதிக்கும் வகையிலே எப்படி பத்திரிக்கைக்கு அளிக்கலாம்எதுவாக இருந்தாலும் தொலைபேசியில் பேசி கொள்ளவேண்டியது.இல்லை என்றால் யாராவது ஒருவர் மூலம் பேசி கொள்ளலாம்.நீங்களே தொலைக்காட்சியில் செய்தி போடுகிறீர்கள்.இவர் சென்று பேசுகிறார்.அவர் சென்று பேசுகிறார் என்று  ஒரு கடிதம் எழுதி,அதனை வேண்டுமென்றே பத்திரிக்கையில் வெளியிடச் செய்வது என்றால் என்ன அர்த்தம்.அப்படி என்றால் ஒபிஎஸ்சுக்கு என்ன உள்நோக்கம் என்பதை நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும்தமிழகம் முழுவதும் அதிமுகவை பொறுத்தவரையில் ஒற்றை தலைமை வேண்டும்  என்ற பெரும் எழுச்சி ஏற்பட்டுள்ளது, எடப்பாடியார் ஒற்றை தலைமைக்கு வரவேண்டும் என்ற எழுச்சிஇதுபோன்ற நிலையிலே,இதனை எப்படியாவது தடுத்துவிடவேண்டும் என்ற எண்ணத்தோடு நீதிமன்றங்களுக்குச் செல்வதும்கடிதம் எழுதுவதும் இதனை அதிமுக தொண்டர்கள் ஏற்க மாட்டார்கள்

 ஒற்றை தலைமை குறித்து  நான் சொன்னதில் எந்த தவறும் கிடையாது.. வெளிப்படை தன்மை  வேண்டும் என்பதால் வெளியில் சொல்கிறேன்.இது தொண்டனுக்குத் தெரியக்கூடாது என்று ஒபிஎஸ் நினைக்கின்றாராதொண்டனுக்கு இரும்பு திரை போட்டு எதுவும் தெரியக்கூடாது என்று நினைக்கிறாரா.அடிப்படை தொண்டனுக்கு அனைத்தும் தெரியவேண்டும்.எம்ஜிஆர் ஜெயலலிதா காலத்தில் கட்சிக்கு களங்கம் கற்பிற்கும் வகையில் நடந்துகொண்ட காரணத்தினால் ஒருவர்  கட்சியிலிருந்து நீக்கி வைக்கப்படுகிறார்.அவரோடு  யாரும் தொடர்பு வைத்துக்கொள்ளக்கூடாது என்றுதானே கையெழுத்து போட்டு அளித்துள்ளீர்கள்.ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் இருவரும் கையெழுத்துப் போட்டு அளித்துள்ளார்கள்நீக்கப்பட்டவர்களை ஈபிஎஸ் சந்தித்தாராஒபிஎஸ் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட புகழேந்தியை (அது ஒரு மேய்கால் புறம்போக்கு.பட்டா நிலம் இல்லை.) ஒருங்கிணைப்பாளர் எப்படி சந்திக்கலாம்அவருக்கு கட்சியின் சட்டதிட்டம் பொருந்தாதாஅப்போது எந்த வித தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது என்று அறிக்கை அளித்தீர்கள் இல்லையாஅப்படி என்றால் ஒருங்கிணைப்பாளருக்கு ஒரு சட்டம்.சாதாரண தொண்டருக்கு ஒரு சட்டமாநான் இதனை விமர்சனம் செய்யவில்லைஆனால் அவர் நடவடிக்கையை உங்களிடம் தெரிவிக்கிறேன்…..

 .அதிமுக பொதுக்குழு  திட்டமிட்டபடி நடைபெறும்அதில் எந்த மாற்றமும் இல்லை.அது குறித்து ஓபிஎஸ் .தரப்பு நீதிமன்றத்திற்கே போகக்கூடாதுஜெ கட்சியின் விதிகளை திருத்தி தெளிவாக வைத்துள்ளார்கட்சி சார்பில் யார் நீதிமன்றத்திற்குப் போனாலும் அவர்களின் அடிப்படை உறுப்பினர் பதவி போய்விடும்இது வேறு விஷயம்.இருக்கும் விதிகளை நான் தெளிவுபடுத்திவிட்டேன்.இன்றைக்கு 2 ஆயிரம் பேர் ஒன்றுகூடி பொதுக்குழுவை நடத்தித்தான் ஆகவேண்டும் என்று கடிதம் அளித்ததின் அடிப்படையில் கண்டிப்பாக திட்டமிட்டபடி பொதுக்குழு நடைபெறும்யார் எப்படி நீதிமன்றம் சென்றாலும் சரி,எங்களைப் பொறுத்தவரை உரிய பதிலை நாங்கள் அளிப்போம்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

0Shares

Leave a Reply