சர்வதேச குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு தினம் அனுசரிப்பு.

Loading

 சர்வதேச குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு  தினத்தை முன்னிட்டு விழுப்புரம் மாவட்டம் செஞ்சி பேருந்து நிலையத்தில் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. அத்தான் சிறுபான்மையினர் மற்றும் வெளிநாடு வாழ் தமிழன் நலத்துறை அமைச்சர் அவர்கள் தலைமை ஏற்று முதல் கையொப்பமிட்டு நிகழ்ச்சியை துவக்கி வைத்தார் .
இந்நிகழ்ச்சிக்கு திரு ஜான் போஸ்கோ சைல்டு லைன் ஒருங்கிணைப்பாளர் அவர்கள் வரவேற்றார். திரு விஜயகுமார் செஞ்சி ஒன்றிய பெருந்தலைவர். திரு ஜான் வில்லியம்ஸ்   நிறுவனர் கார்ட்ஸ் தொண்டு நிறுவனம் .  திருமதி திவ்யா   உதவி தொழிலாளர் நல அலுவலர் ஆகியோர் முன்னிலை வகித்தனர் இந்நிகழ்ச்சியில் குழந்தை தொழிலாளர் எதிரான உறுதிமொழி ஏற்கப்பட்டு துண்டுப்பிரசுரம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.
ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கையொப்பமிட்டு குழந்தைத் தொழிலாளர் எதிரான இயக்கத்தில்  தங்கள் ஆதரவை தெரிவித்தனர்.  மேலும் இந்நிகழ்ச்சியில் திரு நெப்போலியன் மற்றும் திரு சதீஷ் ஆகியோர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்திலிருந்து கலந்துகொண்டனர் விழுப்புரம் சைல்டு லைன் திட்டத்திலிருந்து திரு ஜோசபஸ் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு லட்சுமிபதி ஒருங்கிணைப்பாளர் மற்றும் சமூகநல துறையினர் காவல் துறையினர் செஞ்சு வர்த்தக சங்க உறுப்பினர்கள் கல்வித் துறை வருவாய்த் துறை மற்றும் இதர அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
0Shares

Leave a Reply