சென்னையிலும் வெடித்தது அக்னிபாத் போராட்டம்
சென்னை, ஜூன்- 19
அக்னிபாத் திட்டத்துக்கு எதிராக சென்னை கோட்டை அருகே இளைஞர்கள் நடத்திய போராட்டத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது
ஒன்றிய அரசின் குறுகிய கால ராணுவ சேவை திட்டமான அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் வலுத்து வருகிறது. ஆந்திரா, பீகார், உத்தரப் பிரதசேம், அரியானா உள்ளிட்ட மாநிலங்களில் இத்திட்டத்திற்கு எதிராக இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் ஆரணி, கோவை, திருவண்ணாமலையை சேர்ந்த இளைஞர்கள் திரண்டு வந்து சென்னையில் நேற்று காலை நடத்திய ஆர்ப்பாட்டத்தால் பெரும் பதட்டம் ஏற்பட்டது, இதைத்தொடர்ந்து போலீசார் அவர்களுடன் சமரச முயற்சியில் ஈடுபட்டனர், இதனையடுத்து சிறிது நேரம் கோஷமிட்டு தங்களது ஆதங்கத்தை தெரிவித்த இளைஞர்கள் பின்பு அமைதியாக கலைந்து சென்றனர், இவர்களில் பெரும்பாலோர், கடந்த ஆண்டு நடைபெற்ற ஆள்சேர்ப்பு முகாமில் தேர்வு செய்யப்பட்டவர்களாவர், சென்னை கடற்கரை காமராஜர் சாலை போர் நினைவு சின்னம் அருகே நடைபெற்ற போராட்டத்தால் அந்த பகுதியெங்கும் போலீசார் குவிக்கப்பட்டனர், அந்த வழியாக சென்ற பேருந்துகள், ஆட்டோக்கள், மற்றும் வாகனங்களும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டன