பள்ளி வாகனங்களை ஆய்வு செய்வதை நேரில் பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர்
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் கன்கார்டியா பள்ளியில், மாவட்ட அளவிலான சிறப்பு குழுவினர் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்வதை கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர் மா.அரவிந்த் IAS நேற்று நேரில் பார்வையிட்டு தெரிவிக்கையில் :-
தமிழ்நாடு மோட்டார் வாகன பள்ளி வாகனங்களுக்கான ஒழுங்கு மற்றும் கட்டுப்பாட்டு விதிகள் 2012-ன் படி வருடத்திற்கு ஒரு முறையாவது அனைத்து பள்ளி வாகனங்களையும் மாவட்ட அளவிலான சிறப்பு குழு பள்ளி வளாகத்தில் ஆய்வு செய்து பொதுச்சாலையில் இயக்க தகுதி வாய்ந்ததாக உள்ளதா என ஆய்வு செய்யப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி 79 கல்வி நிறுவனங்களின் 341 வாகனங்களை கன்கார்டியா பள்ளி மைதானத்தில் மாவட்ட அளவிலான சிறப்பு குழுவினரால் வாகனங்கள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும், பேருந்தில் தீ விபத்து ஏற்பட்டால்
அதனை எப்படி கையாள்வது குறித்து அனைத்து வாகன ஓட்டுநர்களுக்கும் பயிற்சி வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், வட்டார போக்குவரத்து அலுவலர் ஜி.சசி, மோட்டார் வாகன ஆய்வாளர் கா.சக்திவேல், நாகர்கோவில் காவல் துணை கண்காணிப்பாளர் நவின் குமார் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.