காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு; இளம்பெண் தற்கொலை

Loading

திருக்கனூர் திருக்கனூர் அருகே காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு திருக்கனூர் அருகே சோரப்பட்டு டி.வி.சென்டர் வீதியை சேர்ந்தவர் தங்கராசு. இவரது மனைவி சுசீலா. இவர்களது மகள் தட்சண்யா (வயது 19). பிளஸ்-2 படித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார். இந்தநிலையில் தட்சண்யா, அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் இந்த காதலுக்கு தட்சண்யாவின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனால் தட்சண்யா காதலித்து வந்த வாலிபர் வீட்டார், அவருக்கு வேறு இடத்தில் பெண் பார்க்க தொடங்கினர். இளம்பெண் தற்கொலை இதுகுறித்து அறிந்த தட்சண்யா மனவேதனை அடைந்தார். காதலனுக்கு வேறு இடத்தில் பெண் பார்ப்பதை பொறுத்து கொள்ள முடியாத அவர் தற்கொலை செய்யும் முடிவுக்கு துணிந்தார். நேற்று முன்தினம் மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த திருக்கனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் புனிதராஜ் தலைமையிலான போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காதலித்த வாலிபரை திருமணம் செய்ய முடியாத ஏக்கத்தில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

0Shares

Leave a Reply