“தலைக்கவசம் உயிர்க்கவசம்” 1000 பத்திரிகை ஊடகவியலாளர்களுக்கு தலைக்கவசம் வழங்கிய சிறப்பு விழா!
சென்னை :அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் தேசியசெயலாளர்,, கிங்மேக்கர் நிறுவனத் தலைவருமான டாக்டர் எஸ். ராஜசேகர் அவர்களின் 53 வது பிறந்தநாள் விழா 1000 பத்திரிக்கையாளர் ஊடகவிய லாளர்களுக்கு தலைக்கவசம் வழங் கும் நலத்திட்ட விழாவாக கொண்டாட ப்பட்டது.
ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடுதல், அரசு பள்ளி வளாகங்களுக்கு தேவை யான மேசைகள், இருக்கைகள், கணினி உள்ளிட்டவை வழங்குதல், பள்ளி மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள் மற்றும் அடிப்படை தேவைகளை வழங்குதல், சிறப்பாக பணியாற்றும் ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்கி சிறப்பித்தல் என வித்தியாசமான நலத்திட்ட உதவிகளை வழங்கும் விழாவாக டாக்டர் ராஜசேகரின் பிறந்த நாள் விழாக்கள் ஒவ்வொருஆண்டும் கொண்டாடப்பட்டு வருகின்றது .
ஜுன்.4 அன்று சென்னை தியாகராய நகர் வாணி மஹாலில் நடைபெற்ற பிறந்தநாள் விழாவிற்கு மேனாள் நீதியரசர் டி.என். வள்ளிநாயகம், அறிவியல் அறிஞர் வி.பொன்ராஜ் மற்றும் காவல் கண்காணிப்பாளர் மார்டின் , அனைத்து இந்திய பத்திரிகை ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளர் சங்கத்தின் தேசிய தலைவர் டாக்டர் எஸ். இராஜேந்திரன் சால்வை சந்தன மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.மற்றும் பலர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். டாக்டர் ராஜசேகர் அவர்களுக்கு பொன்னாடை மற்றும் ஆளுயர பூமாலை, பூ கிரீடம் அணிவித்து வாழ்த்தியும் பாராட்டியும் பேசினர்.
மேலும் 30க்கும் மேற்பட்ட பத்திரிக்கை ஊடகவியலாளர் சங்கங்களின் தலைவர்களும் , பொறுப்பாளர்களும் சங்க உறுப்பினர்களும் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டும், பத்திரிக்கையாளர்களுக்கான நலத் திட்ட உதவிகளை பெற்றுக் கொண் டும் நிகழ்வை சிறப்பித்தனர் .
அகில இந்திய பத்திரிகை ஊடக சங்கத்தின் தலைவர் ஆ.வேல் முருகன் அனைவரையும் வரவேற்றுப் பேசினார் . அகில இந்திய ரியல் எஸ் டேட் கூட்டமைப்பின் நிறுவனத் தலைவர் ஆ.ஹென்றி விழா தலைமை யேற்று நிகழ்வுகளை ஒருங்கிணை த்திட்டார் .
டாக்டர் ராஜசேகரின் கிங் மேக்கர்ஸ் நிறுவனம் ஒரு வீட்டுமனை விற்பனை நிறுவனமாக மட்டுமல்லாமல், ” என் மக்கள் என் தேசம் ” எனும் சமூக அக் கறை பாராட்டி, பல்வேறு சமுதாய நற்பணிகளை நிறைவேற்றி வருவது பாராட்டத்தக்கது .
மழுங்கடிக்கப்பட்ட மரபு வழி விவசா யத்தை மீட்டெடுத்து இயற்கை விவசா யத்தை முன்னெடுக்கும் முறையில் ஈடுபட்டு வருகிறது . கைவிடப்பட்ட மூத்த குடிமக்களுக்கு தன்னம்பிக் கையை ஊட்டும் வகையில் அவர் களுக்கு தேவையான உதவிகளையும் செய்து வருகிறது .
5000 ஆட்டோ ஓட்டுனர்களுக்கு விபத்து காப்பீட்டினையும், 6500 இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு இலவச மாக தலைக்கவசத்தையும் வழங்கி இருக்கிறது. இது போன்ற எண்ணற்ற சமூக பணிகளை தொடர்ந்து இந்நிறு வனம் மனிதநேயத்தோடு நிறைவே ற்றி வருகிறது என்பது பாராட்டுக்கு ரியதாகும் .வணிக நிறுவனங்களுக்கு ஒரு முன் உதாரணமாக இருக்க வேண்டிய விழிப்புணர்வையும் ஏற்படுத்தி இருக்கிறது என சிறப்பு விருந்தினர்கள் பிறந்தநாள் காணும் ராஜசேகரனை அவரது வணிக நிறுவனத்தினை பாராட்டி வாழ்த்தி பேசினர் .
தமிழ்நாடு பத்திரிக்கையாளர்கள் சங்கத்தின் தலைவர் டி.எஸ்.ஆர் சுபாஷ் நிகழ்வில் கலந்துகொண்டு “தலைக்கவசம் உயிர்க்கவசம்” என தலைக்கவசத்தின் பயன்பாட்டினை வலியுறுத்தியும், முழக்கங்கள் எழுப்பி யும் உரையாற்றினார் .
தஞ்சை தமிழ்பித்தன், லயன் டாக்டர் ராஜேந்திரன் , ஆ. வேல்முருகன், கா.குரு, கருணாகரன் , ராபர்ட் ராஜ் ஜி .நாகராஜன் , ஆனந்தராஜ், ரிச்சர்ட் ஆனந்த் , ஜெகதீசன் , ரஞ்சித் பிரபா கரன், திவான் மைதீன், எஸ். சரவ ணகுமார், ஹபீஸ், இதழாளர் இசைக்கும்மணி உள்ளிட்ட பத்திரிக்கை ஊடகவியலாளர்கள் சங்கத்தின் பொறுப்பாளர்களும், மூத்த பத்திரிகையாளர்கள் என பலரும் மேடையில் தலைக் கவசங் களை கையிலேந்தி உயிர் காப்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.