சென்னை எழும்பூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் கே.பி.பார்க் குடியிருப்புப் பகுதியில் 1.31 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய விளையாட்டுத் திடல் அமைக்கும் பணியினை அடிக்கல் நாட்டி, தொடங்கி வைத்தார்
சென்னை எழும்பூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் இ.பரந்தாமன், எழும்பூர் தொகுதிக்குட்பட்ட மண்டலம்-6, வார்டு-77-இல் அமைந்துள்ள தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியக் கே.பி.பார்க் குடியிருப்புப் பகுதியில் 1.31 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய விளையாட்டுத் திடல் அமைக்கும் பணியினை அடிக்கல் நாட்டி, தொடங்கி வைத்தார் நிகழ்ச்சியில் வட்டசெயலாளர் கமலகண்ணன், மாவட்ட பிரதிநிதிகள் , நிர்வாகிகள் தொண்டர்கள், கூட்டணி கட்சியினர் பொதுமக்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சட்டமன்ற உறுப்பினர் பரந்தாமன்
இப்பகுதி மக்களின் தேவையை அறிந்து அரசுக்கு தெரிவித்தேன் உடனடியாக தமிழ்நாடு முதல்வர் அவர்களின் உத்தரவின் பெயரில் 1.31கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து தற்பொழுது விளையாட்டு மைதானத்திற்கான அடிக்கல் நாட்டப்படுள்ளது இன்று..
இளைஞர்களின் நலனில் அக்கறை கொண்ட விளையாட்டுத்துறையை ஊக்குவிக்கும் அரசாக மாண்புமிகு முதல்வர் தலைமையிலான அரசு உள்ளது.. இத்திட்டம் வருவதற்கு காரணமான நகராட்சி துறை அமைச்சர் கே.என்.நேரு, மாவட்ட செயலளாரும் அமைச்சருமான சேகர்பாபு அவர்களுக்கும் நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன் மேலும் உடற்பயிற்சி நிலையம் வேண்டுமென இங்குள்ள இளைஞர்கள் தெர்வித்தனர் அதனடிப்படையில் 50இலட்சம் மதிப்பில் விரைவில் உடற்பயிற்சி கூடம் அமைக்கப்படவுள்ளது எனவும் தெரிவித்தார்….