இன்றைய ராசி பலன்கள்

Loading

மேஷம்

பகைவர்களால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும். அக்கம்பக்கத்தினருடன் சுமூகமாக உறவைப் பேணுவீர்கள். காரிய வெற்றிக்குத் தேவையான உதவிகள் கிடைக்கும்.சிக்கலான வேலைகளை சிறப்பாக முடித்து மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். வேகமும் விவேகமும் கலந்து வியாபாரத்தை நடத்துவீர்கள். மனை இடங்கள் வாங்குவதற்கான முயற்சிகள் வெற்றி பெறும்.

ரிஷபம்

தொழிலை விரிவுபடுத்த வங்கி லோன் கிடைக்கும். உறவினர்களின் ஆதரவு உற்சாகத்தைக் கொடுக்கும். குடும்பத்தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். பிள்ளைகளின் படிப்புச் செலவுகளை பக்குவமாக சமாளிப்பீர்கள். சவாலான காரியங்களில் விரைந்து வெற்றி அடைவீர்கள். பதவி உயர்வும் சம்பள உயர்வும் பெறுவீர்கள். தனவரவு தாராளமாக இருக்கும்.

மிதுனம்

வெளிநாட்டில் இருந்து வர வேண்டிய முக்கிய தகவல்கள் தாமதமாகும். அரசுத் துறை பணியாளர்கள் அலட்சியமாக நடக்க வேண்டாம். சக ஊழியர்களின் விவகாரங்களில் தலையிடாதீர்கள். அதிகமான உழைப்பால் வியாபாரம் வெற்றி பெறும். குடும்பத்தில் வாக்குவாதங்கள் ஏற்படும். பிள்ளைகளின் நடவடிக்கையை கண்காணியுங்கள். கடன் சுமை அதிகரிக்கும்.

கடகம்

வேலை காரணமாக சில நாட்கள் குடும்பத்தைப் பிரிவீர்கள். சுப நிகழ்ச்சிகளுக்காக அதிகம் செலவு செய்வீர்கள். உறவினர் வகையில் மனத்தாங்கல் உருவாகும். நண்பர்களின் ஒத்துழைப்பும் சிறப்பாக இல்லை. எதிர்ப்புகளைத் தாண்டி தொழிலை நடத்த வேண்டி வரும். நடைபாதை வியாபாரிகள் சிரமத்திற்கு ஆளாவார்கள். தொழில் சம்பந்தப்பட்ட பயணங்களால் சுகவீனம் ஏற்படும்.

சிம்மம்

தங்க நகைகள் வாங்கி இல்லத்தரசிகளை மகிழ்ச்சிப் படுத்துவீர்கள். ஊழியர்களின் ஒத்துழைப்பால் பணிகளைச் சிறப்பாகச் செய்வீர்கள். தொழில் துறையில் ஏற்றம் ஏற்படும். சிறு வியாபாரங்கள் சீராக நடக்கும். வேகம் காட்டி பழைய பாக்கிகளை வசூல் செய்வீர்கள். நீண்ட காலமாக இருந்து வந்த பிரச்சினைகளைச் சரி செய்வீர்கள். பங்குச்சந்தை சிறந்த லாபத்தைத் தரும். கன்னி பணியாளர்கள் ஓவர் டைம் பார்த்து சம்பாதிப்பார்கள். ஒர்க் ஷாப் நடத்துகிறவர்களுக்கு வருமானம் அதிகரிக்கும். டீக்கடை, பெட்டிக் கடைக்காரர்கள் திருப்தியான லாபம் பெறுவார்கள். ஏற்கனவே கொடுத்த பழைய பாக்கிகள் வசூலாகி மனத் திருப்தி ஏற்படும். கட்டிடத் தொழிலாளர்களுக்கு தொடர்ந்து வேலை கிடைக்கும். பதவி உயர்வுக்காக காத்திருந்தவர்கள் சாதகமான பலனை அடைவார்கள். துலாம் வெளிநாட்டில் சம்பாதித்த பணத்தில் வீடு கட்ட திட்டம் தீட்டுவீர்கள். பணியாளர்கள் உழைப்புக்கேற்ற ஊதியம் பெறுவார்கள். குடும்பத்தினர் உங்கள் முயற்சிகளுக்கு ஒத்துழைப்புத் தருவார்கள். கிடைக்குமா என்று நினைத்த பணம் எதிர்பாராமல் கைக்கு வரும். பம்பரமாகச் சுழன்று புதிய ஆர்டர்களைப் பெறுவீர்கள். நெருக்கடிகளைத் தாண்டி வியாபாரத்தை வெற்றிகரமாக நடத்துவீர்கள். விருச்சிகம் புத்திசாலித்தனமாக தொழிலை நடத்த வேண்டும். வியாபாரத்தில் வரும் வில்லங்கங்களை அறிவுக் கூர்மையால் விலக்க வேண்டும். வெளியூர்ப் பயணங்களில் தடை உண்டாகும். வெளிநாட்டில் இருந்து வரவேண்டிய செய்திகள் தாமதமாகும். குடும்பத்தினரிடம் அன்பாக நடந்து கொள்ளுங்கள். டீக்கடையில் அமர்ந்து விவாதம் செய்யாதீர்கள். சந்திராஷ்டம காலம். பொறுமை தேவை.

Read more at: https://tamil.oneindia.com/astrology/rasi-palan-today/articlecontent-pf340779-335826.html

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *