ஓய்வு பெற்ற அரசு ஊழியரிடம் ரூ 19லட்சம் மோசடி.! இருவர் தலைமறைவு.!
![]()
ஈரோடு மே 31
ஓய்வுபெற்ற அரசு ஊழியரிடம் விவசாயத்திற்கு நிலம் வாங்கி தருவதாக ஏமாற்றி ரூ 19 லட்சம் மோசடி செய்த நபர் மீது தக்க நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டு எடுக்க மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கினார்
ஈரோடு மாவட்டம் தாளவாடி தாலுக்கா 2/326 அருள் வாடி என்ற முகவரியில் வசிக்கும் சிவண்ணா என்பவர் பட்டு வளர்ச்சித்துறை, உதவி இயக்குனர் அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக தாளவாடியில் பணிபுரிந்து கடந்த 2018 நவம்பர் மாதம் ஓய்வு பெற்றார் ஓய்வு பெற்ற பணத்தை தனக்கு வாழ்வாதாரமாக பூமி வாங்கி விவசாயம் செய்ய ஆசைப்பட்டார்.
இதைத் தெரிந்து கொண்ட மல்லன் குழி பஞ்சாயத்து தலைவர் புட்டுதேவம்மா மற்றும் அவர் மகன் ரமேஷ்
நெருங்கிய உறவுக்காரர்கள் என்பதால் ரமேஷ் நல்ல விவசாய பூமி இருப்பதாக ,நல்ல முறையில் வாங்கி தருவதாக உறுதி கூறினார் இந்நிலையில் ரமேஷ் ,சிவண்ணா வீட்டிற்கு சென்று பூமி தயார் நிலையில் இருக்கிறது அதை வேறு யாருக்கும் கொடுப்பதாக இல்லை பூமி உரிமையாளர் எனக்கு மட்டும் கிரையம் செய்து தருவதாக உறுதி அளித்துள்ளார் எனவே என் பெயருக்கு கிரையம் செய்து மறுநாள் தங்கள் பெயருக்கு மாற்றித் தருகிறேன் என்னை நம்புங்கள் என கூறியுள்ளார், இதைக் கேட்ட சிவண்ணா, ரமேஷ் பேச்சை நம்பி மேற்படி பூமி 2.38 ஏக்கர் நிலத்தை கிரைய தொகை சேர்த்து 19 லட்சம் கொடுத்தால் கிரைம் செய்து கொள்ளலாம் என்றும் ஆசை வார்த்தை கூறியதால் கடந்த பிப்ரவரி மாதம் 2021 மல்லன் குழி பஞ்சாயத்து தலைவர் புட்டு தேவம்மா , அவரது மகன் ரமேஷ் ஆகியோரிடம் 19 லட்சத்தை கொடுத்து 19 பிப்ரவரியில் க.ச.எண் 745 , 2.38 ஏக்கர் நிலத்தை ரமேஷ் பெயரில் கிரையம் செய்து கொண்டார் ,பிறகு நீண்ட நாட்களாகியும் சிவண்ணா பெயருக்கு சொத்தை எழுதி தராததால் பிடிவாதம் செய்து ஒரிஜினல் ஆவணம் மட்டும் கொடுத்து உங்கள் பெயருக்கு பத்திரப்பதிவு தயார் செய்யுங்கள் என கொடுத்ததை ஆவணத்தை பத்திர அலுவலகத்தில் எனது பெயருக்கு கிரைய பத்திரம் கேட்டபொழுது இந்த இடம் ஏற்கனவே 5 லட்சத்தில் அடமானத்தில் இருப்பதாக தகவல் தெரிந்ததால் மேலும் அதிர்ச்சி அடைந்தார் தாளவாடி காவல்நிலையத்தில் புகார் அளித்து மூன்று மாத கால அவகாசத்தில் பணம் தருவதாக எழுதிக்கொடுத்து சென்றவர்கள் அவகாசம் முடிந்து பிறகு 25 நாட்கள் கழித்தும் பணம் தராததால் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள புட்டுதேவம்மா மற்றும் ரமேஷ் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர் அரசு ஊழியராக இருந்து ஓய்வு நேரத்தில் கிடைத்த பணத்தை மீதி காலத்தில் நிம்மதி பெற முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்.

