தூத்துக்குடி வட்டத்தில் வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், அவர்கள் தலைமையில் நடைபெற்றது
தூத்துக்குடி மாவட்டம், தூத்துக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், அவர்கள் தலைமையில் (25.05.2022)அன்று நடைபெற்றது.
தூத்துக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தியில் கீழத்தட்டப்பாறை உள்வட்டத்திற்குட்பட்ட உமரிக்கோட்டை, கீழத்தட்டப்பாறை, மேலத்தட்டப்பாறை, அல்லிக்குளம், மறவன்மடம், செந்திலாம்பண்ணை, தெற்குசிலுக்கன்பட்டி ஆகிய 7 கிராமங்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் இன்று நடைபெற்ற வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) நிகழ்ச்சியில் பொதுமக்களிடமிருந்து உட்பிரிவு பட்டா 4, முதியோர் உதவித்தொகை 8, தனிப்பட்டா 36, இலவச வீட்டுமனைப்பட்டா 4 மற்றும் இதர மனு 1 என மொத்தம் 53 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. மேலும், கிராமங்களுக்குரிய வருவாய் கணக்குகள் மாவட்ட ஆட்சித்தலைவரால் தணிக்கை செய்யப்பட்டது.
ஜமாபந்தியின் போது பெறப்பட்ட மனுக்களை விசாரணை செய்து உடனடி தீர்வு காண சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு, மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், அவர்கள் அறிவுறுத்தினார்கள். மேலும், ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் கீழத்தட்டப்பாறையை சேர்ந்த 10 பேருக்கு இலவச வீட்டுமனைப்பட்டா, 6 பேருக்கு குடும்ப அட்டைகள் (ஸ்மார்ட் கார்டு), 3 பேருக்கு முதியோர் உதவித்தொகை, உதவித்தொகைக்கான ஆணையினை வழங்கினார்.
மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
