வள்ளல் சி. கந்தசாமி நாயுடு மற்றும் வள்ளல் பச்சையப்பர் திருவுருவப் படங்கள் திறப்புவிழா
பச்சையப்பன் அறக்கட்டளை நிர்வாகத்தின் கீழ் இயங்கும் சென்னை, அண்ணாநகர் சி. கந்தசாமி நாயுடு ஆடவர் கல்லூரி வளாகத்தில் வள்ளல் சி.கந்தசாமி நாயுடு மற்றும் வள்ளல் பச்சையப்பர் ஆகியோரின் திருவுருவப் படங்கள் திறப்புவிழா நடைபெற்றது. இவ்விழாவில் சென்னை பச்சையப்பன் அறக்கட்டளையின் செயலாளர் சி. துரைக்கண்ணு அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு வள்ளல் சி.கந்தசாமி நாயுடு மற்றும் வள்ளல் பச்சையப்பர் ஆகியோரின் திருவுருவப் படங்களைத் திறந்து வைத்தார்.
இவ்விழாவானது கல்லூரி முதல்வர் முனைவர் ப. முருககூத்தன் அவர்களின் முன்னிலையில் மிகச்சிறப்பாக நடைபெற்றது.
இவ்விழாவில் வள்ளல் சி.கந்தசாமி நாயுடு அவர்களின் குடும்பத்தினர், காலை மற்றும் மாலை நேரக்கல்லூரி துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், கண்காணிப்பாளர், ஆசிரியரல்லாத பணியாளர்கள், கல்லூரியின் முன்னாள் மற்றும் இந்நாள் மாணவர்கள், நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் மற்றும் தேசிய மாணவர்படை மாணவர்கள் ஆகியோர் திரளாக கலந்து கொண்டு இவ்விழாவினைச் சிறப்பித்தனர்.
இவ்விழாவானது கல்லூரி முதல்வர் முனைவர் ப. முருககூத்தன் அவர்களின் தலைமையில் கல்லூரியின் ஆங்கிலத் துறைத்தலைவர் எஸ். ஜெகதீஸ்வரி, கணிதவியல் துறைத்தலைவர் முனைவர் ப. சுமதி, தமிழ்த் துறைத்தலைவர் முனைவர் கு. சிவகாமி, தெலுங்கு துறைத்தலைவர் முனைவர் சி. சம்பத், ஆங்கிலத்துறை உதவிப்பேராசிரியர் எஸ். அர்ச்சனா, மற்றும் வேதியியல்துறை உதவிப்பேராசிரியர் முனைவர் ப. வினாயகமூர்த்தி ஆகியோரைக் கொண்ட உயர்மட்டகுழு அமைக்கப்பட்டு அதன் வழிகாட்டுதலில் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களைக் கொண்ட பல்வேறுக் குழுக்கள் அமைக்கப்பட்டு அவர்களின் முழு ஒத்துழைப்புடன் இவ்விழா சிறப்பாக நடைபெற்றது.
இவ்விழாவிற்கு வருகைபுரிந்த அனைவரும் வள்ளல் சி. கந்தசாமி நாயுடு மற்றும் வள்ளல் பச்சையப்பர் திருவுருவப் படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
நிகழ்ச்சியின் நிறைவாக ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களுக்கு வள்ளல் கந்தசாமி நாயுடு அவர்களின் குடும்பத்தினரும், இந்நாள் மாணவர்களுக்கு, முன்னாள் மாணவர்களும் உணவு வழங்கி சிறப்பித்தனர்..