கிணற்றில் தவறி விழுந்து சிறுவன் சாவு

Loading

கிருஷ்ணகிரி தேன்கனிக்கோட்டை: தளி அருகே உள்ள நெல்லுமார் கிராமத்தை சேர்ந்தவர் ராஜூ. இவரது மகன் ரஞ்சித் (வயது 15). இவன் தனது தாயுடன் தளி கொத்தனூரில் உள்ள விவசாய நிலத்திற்கு சென்றான். அங்கு காலை உணவு சாப்பிட்டு விட்டு கை கழுவ விவசாய கிணற்றுக்கு சென்றார். அங்கு போர்வெல்லில் இருந்து கிணற்றில் பைப் மூலம் ஊற்றிய தண்ணீரில் கைகளை கழுவ முயன்றான். அப்போது கிணற்றுக்குள் தவறி விழுந்து ரஞ்சித் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தான். இதுகுறித்து தகவல் அறிந்ததும் தளி போலீசார் விரைந்து சென்று சிறுவனின் உடலை கிணற்றில் இருந்து மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

0Shares

Leave a Reply