கூல் கோடைகால முகாம்*
சிவகங்கை மாவட்டம்
காளையார்கோவில் அருகிலுள்ள புலியடிதம்மம் ஆக்சிலியம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மூன்று நாட்கள் கூல் கோடைகால முகாமின் துவக்க விழா நடைபெற்றது. தமிழ்நாடு அறிவியல் இயக்க சிவகங்கை மாவட்ட செயலாளர் ஆரோக்கியசாமி தலைமை வகித்தார். பெட்ரோல் பங்க் உரிமையாளர் ஜோசப், கூல் கோடைகால முகாமின் ஆலோசகர் அருட்சகோதரி ஜெனோபியா முன்னிலை வகித்தனர். மாலை வகுப்பு ஒருங்கிணைப்பாளர் ஜோஸ்பின் வரவேற்றார்.
மாணவ மாணவிகளுக்கு பல்வேறு அறிவியல் செய்முறை சோதனைகளை செய்து காட்டி நவீன அறிவியலின் வழிமுறைகளான உற்றுநோக்கல், கேள்வி கேட்டல், காரணத்தை ஊகித்தல், சோதித்தல், தகவல் சேகரித்தல், அவற்றை அலசுதல், அதனடிப்படையில் முடிவுக்கு வருதல் போன்ற படிநிலைகளை கையாண்டால் அன்றாட வாழ்வின் பிரச்சனைகளிலும், சமூக பிரச்சினைகளிலும் கை கொள்ளுதலே அறிவியல் பார்வை என்பதை மாவட்ட செயலாளர் ஆரோக்கியசாமி விளக்கிக் கூறினார். மாணவர்களுக்கு வினாக்கள் கேட்கப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
முகாமானது புலியடிதம்மம் நெடோடை, இந்திரா நகர், தெல்லியன்வயல், திட்டுக்கோட்டை, வேம்பனி, கருவிக்காடு ஆகிய ஊர்களில் உள்ள மாணவ மாணவிகளுக்கு தொடர்ந்து அறிவியல் மனப்பான்மை, அறிவியல் கண்ணோட்டம், அறிவியல் பார்வையை தரக் கூடிய வகையில் படைப்பாற்றல்களை செய்து காட்சிப்படுத்துதல், ஓவியம், பாட்டு, நடனம், களிமண் உருவம் அமைத்தல், விளையாட்டு ஆகியவற்றை தன்னார்வலர்களான ரஞ்சிதா, அனுதர்ஷினி, கௌசல்யா, பூமாதேவி, கிளாடிஸ் டயானா, இமெல்டா, பாலா இவர்களை கொண்டு தொடர் பயிற்சியானது வழங்கப்பட இருக்கிறது லாரன்ஸ் நன்றி கூறினார்.