இன்றைய ராசி பலன்கள்
மேஷம்
எதிர்பார்த்த பணியிடமாற்றம் உங்களுக்கு ஏற்படலாம். புதிய ஆர்டர்கள் பெறுவதில் முனைப்புக் காட்டுவீர்கள். கணவன் மனைவிக்கிடையே திடீர் கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும். பழைய பாக்கிகளை வசூல் செய்வதில் அக்கறை எடுப்பீர்கள். புதிய தொழில் தொடங்கி நிலையான வருமானத்தைப் பெறுவீர்கள். வாடிக்கையாளர்களிடம் அனுசரித்துப் பேசி அனுகூலம் அடைவீர்கள்.
ரிஷபம்
உங்கள் இஷ்டத்திற்கு யாருக்கும் உத்தரவாதம் கொடுக்காதீர்கள். நீண்ட நாட்களாக இருந்த சில்லறைச் சண்டைகள் தீரும். வியாபாரம் தொடர்பான சிக்கல்களை நீக்குவீர்கள். வியாபாரத்தில் மெத்தனப் போக்கு இருந்தாலும் பண வரவு சிறப்பாக நடைபெறும். தந்தையாரின் உடல்நிலையில் முன்னேற்றம் உண்டாகும். கடன் சுமை குறைந்து நிம்மதி ஏற்படும்.
மிதுனம்
சொன்ன சொல்லை காப்பாற்ற பாடுபடுவீர்கள். பழைய கடன்கள் வசூலாவதில் இழுபறி நிலை நீடிக்கும். கணவனின் கருத்துக்கு மனைவி எதிர்மாறாகப் பேசுவார். கோபமான போக்கை மாற்றி நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். வெளியூர்ப் பயணங்களால் அதிக ஆதாயம் கிடைக்காது. அலைச்சலால் உடல் பாதிப்பு உண்டாகலாம். சந்திராஷ்டம நாள். நிதானம் தேவை.
கடகம்
தொழில் பார்ட்னர்களிடம் பக்குவமாக நடந்து கொள்ளுங்கள். நிர்ப்பந்தம் காரணமாக விருப்பமில்லாத வேலையில் ஈடுபடலாம். வழக்குகளில் உங்களுக்குச் சாதகமான போக்கு ஏற்படும். எதிலும் எச்சரிக்கையாக செயல்படுவது நல்லது. கணவன் மனைவிக்கிடையே இருந்த மனவருத்தங்கள் நீங்கும். நண்பர்களின் உதவி கிடைப்பதில் தாமதமாகும். காரியத்தடைகள் நீங்கும்.
சிம்மம்
தொழில் போட்டிகளை வெற்றிகரமாக சமாளிப்பீர்கள். நிலுவையில் இருந்த பணம் வந்து சேரும். பெண்கள் திறமையாக நடந்து பிரச்சினைகளைச் விடுபடுவீர்கள். வியாபாரத்தில் இருந்த போட்டிகளை எதிர்கொண்டு வெற்றி பெறுவீர்கள். தொழில் தொடர்பான பயணங்கள் அலைச்சலை ஏற்படுத்தும். குடும்பத்தில் சுபகாரியம் நடக்கும். பணியாளர்கள் வேலைத் திறனை வெளிப்படுத்துவார்கள்.
கன்னி
ஆன்லைன் வர்த்தகங்களை ஒதுக்கி வைப்பது நல்லது. வாக்குக் கொடுத்தால் காப்பாற்ற வேண்டும். இல்லையென்றால் அவமானத்தை சந்திக்க நேரலாம். வீண் வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம். குடும்பத்தினரின் மனநிலை அறிந்து நடந்து கொள்ளுங்கள். இதுவரை இருந்த மனக்குழப்பம் நீங்கி தெளிவு கிடைக்கும். வெளிநாட்டில் இருந்து கிடைக்க வேண்டிய உதவி சற்று தாமதமாகும்.
துலாம்
மேலதிகாரிகளின் உதவியால் புதிய பொறுப்பு கிடைக்கும். வெளியூர்ப் பயணங்களால் எதிர்பாராத பொருள் இழப்பு ஏற்படலாம். இன்றைய முயற்சி நாளைக்கு நல்ல பலனைக் கொடுக்கும். புதிய ஒப்பந்தம் தொடங்குவதற்கு முன்பாக நன்கு ஆலோசனை செய்து கொள்ளுங்கள். போட்டிகள் பற்றிய கவலையை ஒதுக்கிவிட்டு தொழிலில் கவனம் செலுத்துங்கள். பிள்ளைகளிடம் பேசும் போது நிதானம் தேவை.
விருச்சிகம்
அர்ப்பணிப்போடு செய்கின்ற வேலைக்கு நல்ல அனுகூலம் கிடைக்கும். தலைதூக்கும் பிரச்சனைகளை லாவகமாகச் சமாளிப்பீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். அலுவலக வேலை தொடர்பான கவலை நீங்கும். ஆன்லைன் வர்த்தகம் சூடுபிடிக்கும். ரியல் எஸ்டேட் தொழிலில் நல்ல முன்னேற்றம் காண்பீர்கள். பங்குப் பரிவர்த்தனை சாதகமாக இருக்கும்.
தனுசு
குடும்பத்தில் மங்கல நிகழ்ச்சிகள் நடக்கும். வெளியூர்ப் பயணங்களால் தொழிலுக்கு வேண்டிய உதவிகளை பெறுவீர்கள். மருத்துவர்கள், இன்ஜினியர்கள் நல்ல வருமானம் பெறுவார்கள். புதிய ஆர்டர்களைப் பெற்று சாதனை படைப்பீர்கள். குடும்பத்திற்குத் தேவையான பொருட்களை வாங்கி மகிழ்ச்சி அடைவீர்கள். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு உங்களை உற்சாகப்படுத்தும்.
மகரம்
பிள்ளைகள் மூலம் பிரச்சனைகளைச் சந்திப்பீர்கள். தொழில் காரணமாக குடும்பத்தை விட்டு வெளியூரில் தங்க நேரிடும். மற்றவர்களுக்கு உதவி செய்யப் போய் தேவையற்ற குற்றச்சாட்டுகளுக்கு ஆளாவீர்கள். ஆன்லைன் வர்த்தகங்கள் அனுகூலமாக இருக்காது. தொழில் துறைகள் சற்று மந்தமாகவே நடக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கடுமையாகப் பணி செய்ய வேண்டும்.
கும்பம்
குடும்ப உறுப்பினர்கள் விதண்டாவாதமாகப் பேசுவார்கள். நண்பர்களின் அனுசரணையால் மனக்குழப்பம் நீங்கும்.வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்காது. இனந்தெரியாத கவலை மனதை அழுத்தும். கூடுதல் உழைப்பும் வீண் அலைச்சலும் பணியாளர்களுக்கு உண்டாகும். ஒரு விஷயத்தில் சரியான முடிவு எடுக்க முடியாமல் தடுமாறுவீர்கள்.
மீனம்
எந்தக் காரியத்திலும் முன்பின் யோசிக்காமல் துணிச்சலாக இறங்குவீர்கள். மேலதிகாரிகள் சொன்ன வேலையை முடித்து பாராட்டுப் பெறுவீர்கள். வியாபார வளர்ச்சிக்கு இடையூறாக இருந்த தடைகளை உடைப்பீர்கள். தர்மசிந்தனை அதிகரித்து அறப்பணிகள் செய்வீர்கள். உறவினர்களுக்கு இடையே இருந்த பகை விலகும். தடையில்லாமல் பணவரவு கிடைக்கும்.