ஜவுளி வியாபாரி உள்பட 3 பேர் தற்கொலை

Loading

ஜவுளி வியாபாரி தேனி அருகே கொடுவிலார்பட்டி பரமானந்தசாமி தெருவை சேர்ந்தவர் சிவானந்தம் (வயது 40). இவர் 15 ஆண்டுகளாக ஜவுளி வியாபாரம் செய்து வந்தார். அந்த தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தால் ஒரு வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை நிறுவனத்தில் விற்பனை பிரதிநிதியாக வேலை பார்த்தார். இவருடைய மனைவி நாகரத்தினம் (35). தொழில் நஷ்டத்தால் சிவானந்தம் அடிக்கடி மதுகுடித்து வந்ததோடு குடும்பத்தையும் சரிவர கவனிக்கவில்லை என்று கூறப்படுகிறது. நாகரத்தினம் தனக்கு உடல் நலம் சரி இல்லாததால் மருத்துவமனைக்கு சென்று வந்தார். அன்று இரவிலும் மதுபோதையில் சிவானந்தம் வீட்டுக்கு வந்ததால் கணவன், மனைவிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இந்நிலையில், சிவானந்தம் தனது வீட்டில் உள்ள மின்விசிறியில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவருடைய மனைவி நாகரத்தினம் கொடுத்த புகாரின் பேரில் பழனிசெட்டிபட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். Also Read – நீட்டிக்கப்பட்ட வழித்தடங்களில் அரசு பஸ்கள் இயக்கம் பெண் தற்கொலை அதுபோல், தேனி அருகே பூதிப்புரத்தை சேர்ந்த ஈஸ்வரன் மனைவி பிரியா (34). இவர் அடிக்கடி வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் காலை அவர் தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து அவருடைய தாய் ஈஸ்வரி பழனிசெட்டிபட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குடும்ப தகராறு வருசநாடு அருகே உள்ள அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் ஈஸ்வரன் (39). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி பவளக்கொடி. கணவன்-மனைவி இடையே குடும்ப பிரச்சினை தொடர்பாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் பவளக்கொடி கோபித்துக்கொண்டு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வருசநாடு அருகே நந்தனார்புரத்தில் உள்ள அவரது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். இதனால் மனமுடைந்த ஈஸ்வரன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் தொடர்பாக கடமலைக்குண்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *