குழந்தைகளுக்கு சமூக சேவை மற்றும் ஆன்மீக உணர்வுகளை வளர்க்க சிறப்பு வகுப்புகள் நடத்தபட்டு பரிசு வழங்கும் நிகழ்ச்சி

Loading

சென்னை வில்லிவாக்கம் புதிய ஆவடி சாலையில் உள்ள காந்திநகர் இ.சி.ஐ தெலுங்கு தேவாலயத்தில் யூத் சாரிடபிள் டிரஸ்ட்,ஜீசஸ் லைவ்ஸ் குட் நியூஸ் மினிஸ்ட்ரீஸ்(சென்னை)இணைந்து குழந்தைகளுக்கு சமூக சேவை மற்றும் ஆன்மீக உணர்வுகளை வளர்க்க சிறப்பு வகுப்புகள் நடத்தபட்டு பரிசு வழங்கும் நிகழ்ச்சியை நடத்தியது.இதில் சமூக மேய்ப்பன் ரெவரெண்ட் டி.பாலராஜூ தலைமை வகித்தார்.ஜீசஸ் லைவ்ஸ் குட் நியூஸ் மினிஸ்ட்ரீஸ்,பிரதம அதிதியாக நிறுவனர் எஸ்.ரமேஷ் மேத்யூ,யூத் டிரஸ்ட் நிறுவனர் சி.எச்.முகுந்தராவ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.இதில் நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.இதில் ரமேஷ், பாலராஜு, முகுந்தராவ் ஆகியோர் குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்குகினர்.
சி.எச்.முகுந்தராவ் பேசுகையில்,இன்றைய இளைஞர்கள் பல போதைக்கு ஆளாகி, பெற்றோரும், சமுதாயமும் தவித்து வருகின்றனர்.  அவர்களிடம் சமூக மற்றும் ஆன்மீக உணர்வுகளை வளர்க்க அவர்களின் அறக்கட்டளை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது என்றார். இதில் சர்ச் கமிட்டி மகளிர் மற்றும் இளைஞர் அறக்கட்டளை இணைச் செயலர் என்.அகிலேஷ், உறுப்பினர்கள் என்.சுமேஷ் ஆதித்யா கலந்துகொண்டார்.
0Shares

Leave a Reply