மெட்ரோ நிலையத்திற்கு 5 ரூபாய் டாக்டர் பெயர் வண்ணாரப்பேட்டையில் கையெழுத்து இயக்கம்
வட சென்னையில் உள்ள மெட்ரோ ரயில் நிலையம் ஒன்றுக்கு 5 ரூபாய் டாக்டர் ஜெயச்சந்திரன் பெயரை வைக்கக் கோரி வண்ணாரப்பேட்டையில் நேற்று கையெழுத்து முகாம் நடைபெற்றது
தண்ணீர் தொட்டி அருகே நடைபெற்ற இந்த கையெழுத்து முகாமுக்கு நேதாஜி சமூக சேவை இயக்கத்தின் பொது செயலாளர் வன்னியராஜன் தலைமை தாங்கினார் இந்த கையெழுத்து முகாமில் சென்னை மாநகராட்சி மாமன்ற கம்யூனிஸ்ட் உறுப்பினர் ரேணுகா, திமுக சட்ட திருத்த குழு உறுப்பினர் நா. மனோகரன் மத்திய அரசு வழக்கறிஞர் சந்துரு பாஜக வடசென்னை துணைத்தலைவர் ராமையா சிங்காரத் தோட்டம் வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் மம்மி டாடி பாஸ்கர், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் ராயபுரம் பகுதி முன்னாள் செயலாளர் ராமச்சந்திரன் ஆர்கே நகர் பகுதி துணை செயலாளர் ராமலிங்கம், அறிஞர் அண்ணா பூங்கா நடப்போர் நல சங்கத்தின் செயலாளர் குணசேகரன் ஆகியோர் கலந்து கொண்டனர் இந்த கையெழுத்து முகாமில் மாமன்ற உறுப்பினர் ரேணுகா, பேசுகையில் டாக்டர் ஜெயச்சந்திரன் 5ரூபாய் மருத்துவராக மக்களுக்கு மருத்துவ சேவை மட்டும் செய்யவில்லை மெட்ரோ ரயில் திட்டத்தை வடசென்னைக்கு கொண்டு வருவதற்காக மக்களைத் திரட்டி போராடியவர் எனவே அவருடைய பெயரை மெட்ரோ ரயில் நிலையத்திற்கு சூட்டுவது என்பது மிகவும் பொருத்தமானது மட்டுமல்ல மருத்துவத்துறைக்கு அது பெருமையானது.எனவே மத்திய அரசும் மாநில அரசும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார் இந்த கையெழுத்து முகாமில் ஏராளமான ஆண்களும் பெண்களும் பங்கேற்று தங்களது கையெழுத்துக்களை பதிவு செய்தனர்
இந்நிகழ்ச்சியில் நேதாஜி சமூக சேவை இயக்கத்தின் நிர்வாகிகள் கே ஜி பாலன் சரவணன், கார்த்திக்,நாகராஜ் கருணாகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் முடிவில் மாரிக்கனி நன்றி கூறினார்