தஞ்சை ரயிலடி ஸ்ரீ மத் சஞ்சீவி ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகம் நடக்கிறது

Loading

தஞ்சாவூர்,மே.13:
தஞ்சை ரயிலடி அருகே உள்ள ஸ்ரீமத் சஞ்சீவி ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகம் இன்று 13 – ம் தேதி வெள்ளிக்கிழமை மிகவும் சிறப்பாக நடைபெற இருக்கிறது.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுபடியும், இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு வழிகாட்டுதலின் படியும்  தமிழகத்திலுள்ள இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 13 ஆஞ்சநேயர் கோயில்களில் கும்பாபிஷேகம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி தஞ்சை ரயிலடி அருகிலுள்ள ஸ்ரீமத் சஞ்சீவி ஆஞ்சநேயர் கோயில் முற்றிலும் புனர மைக்கப்பட்டது. இதையடுத்து கடந்த 11ம் தேதி புதன்கிழமை மாலை 6 மணிக்கு பகவத் பிரார்த்தனை, புண்யாகவாசனம், எஜமானர் சங்கல்பம், பஞ்ச சூக்த ஹோமம் உள்ளிட்டவை நடைபெற்றன. 12- ம் தேதி வியாழக்கிழமை காலை 11 மணிக்கு அஷ்டபந்தன மருந்து சாத்துதலும், மாலை 4 மணிக்கு சதூர்தச கலச ஸ்நபனம், மகா சாந்தி திருமஞ்சனம் நடைபெற்றன. மாலை 6 மணிக்கு ததுக்தஹோமம், பூர்ணாஹுதியும் நடைபெற்றன. அதைத் தொடர்ந்து இன்று 13 – ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 6.45 மணிக்கு கடம் புறப்பாடும், 7 மணிக்கு விமான கும்பாபிஷேகம் மிகவும் சிறப்பாக நடைபெற உள்ளன.
 7.30 மணிக்கு ஆஞ்சநேயர் பிரதிஷ்டை,  மகாதீபாராதனையும், ப்ரஸாத வினியோகம் நடைபெற்று இனிதே முடிவடைகிறது. இதற்கான ஏற்பாடுகளை ஆலய அர்ச்சகர் கோபால் பட்டாச்சாரியார், ஆகம ப்ரதிஷ்டாதிலகம் ஜெயராம பட்டாச்சாரியார், திருக்கோவில் பணியாளர்கள், நிர்வாகத்தினர், பக்தர்கள், இருப்புப்பாதை குடியிருப்புவாசிகள் செய்திருக்கின்றனர்.
0Shares

Leave a Reply