மக்கள் ராஜ்யம் கட்சி சார்பில் மாநில பொதுச்செயலாளர் வடிவேல்  தலைமையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

Loading

மக்கள் ராஜ்யம் கட்சி சார்பில் மாநில பொதுச்செயலாளர் வடிவேல்  தலைமையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
பின்  பேசிய நிறுவனத்தலைவர் சிவசாமி தமிழக அரசு உடனடியாக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி கல்வி வேலை வாய்ப்பு பொருளாதாரத்தில் பின்தங்கிய போயர்  ஒட்டர் இன சமுதாய மக்களுக்கு மக்கள் தொகை அடிப்படையில் சிறப்பு உள் ஒதுக்கீடு வழங்கிட வேண்டும் கல்லுடைக்கும் தொழிலாளர்களுக்கு கல்குவாரிகள் வைப்பு நிதி இல்லாமல் கல்குவாரி வழங்கிட வேண்டும் DNT  சாதி சான்றிதழில்  போயர் ஒட்டர் இனத்தின் 11 உட்பிரிவுகளையும்  ஒன்றிணைத்து அதில் உள்ள குளறுபடிகளை சரி செய்து தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் எந்த தடையுமின்றி DNT என்று ஒற்றை சான்றிதழ் வழங்க வேண்டும்  வேலை தேடி ஊர் ஊராகச் சென்று வேலை கிடைக்கும் இடத்தில் தங்கி கட்டிட தொழில்கள் செய்யும் கட்டிட தொழில் வேலைகள் செய்யும் மக்களுக்கு ஒரு இடத்தில் நிலையான  வீட்டுமனைப்பட்டா வழங்க வேண்டும் போயர் ஒட்டர் இன மக்கள் உயிர் இழப்புகள் ஏற்படும் போது 10 லட்ச ரூபாய் மற்றும் உடல் ஊனத்துக்கு  5  லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி  சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெறுவதாக தெரிவித்தார்  இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநிலச் செயலாளர்கள் துபாய் ராஜா, ராமு , முருகன் ,   இளைஞர் அணிச் செயலாளர் சின்னத்தம்பி மாநில துணைச் செயலாளர் ஆறுமுகம் உள்ளிட்ட  தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
0Shares

Leave a Reply