இன்றைய ராசி பலன்கள்

Loading

மேஷம்

பல வழிகளில் பணம் வருவதற்கான பாதைகளைத் தேர்ந்தெடுப்பீர்கள். புதிய நட்புகளால் குடும்பத்தில் பிரச்சனை ஏற்படலாம். ஊழியர்களுக்கு தற்போது உள்ள நிலையே தொடரும். எலெக்ட்ரிக் சம்பந்தப்பட்ட தொழில்களில் முன்னேற்றம் ஏற்படும். எடுத்தோம் கவிழ்த்தோம் என்று காரியம் செய்யாதீர்கள். ஏற்றுமதி இறக்குமதி தொழிலில் ஆதாயம் கிடைக்கும்.

ரிஷபம்

தொழிலில் ஏற்பட்ட எதிர்ப்புகளை தூள் தூளாக்குவீர்கள். கமிஷன் வியாபாரத்தில் கணிசமான லாபம் பார்ப்பீர்கள். மனை இடம் வாங்குவதும் புதிய வீட்டுக்கு குடி போவதும் நடக்கலாம். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளை ஆர்வத்தோடு செய்து முடிப்பீர்கள். ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்துச் செல்வதால் இல்லத்தில் சந்தோஷம் நிலவும்.

மிதுனம்

ஏற்றமான இருந்த வியாபாரத்தில் சின்ன இடையூறு ஏற்படலாம். வெளியூர் பயணங்களால் அலைச்சல் அதிகமாகும். வெளிநாட்டில் இருந்து வரவேண்டிய நல்ல செய்தி கிடைக்கும். உங்களால் உதவி பெற்றவர்கள் தக்க சமயத்தில் திருப்பித் தருவார்கள். சகோதர வகையில் செலவுகள் அதிகரிக்கும். புதிய முயற்சிகளால் நடக்கும் தொழிலை விரிவுபடுத்துவீர்கள். மன நிம்மதி கூடும்.

கடகம்

பிரிந்து போன குடும்பங்கள் ஒன்று சேரும். உங்கள் அறிவாற்றல் அதிகரித்து மற்றவர்களால் பாராட்டப்படுவீர்கள். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் காண்பார்கள். வீடு பூமி மனை போன்றவற்றில் செய்த முதலீடு பல மடங்காகப் பெருகும். அரசு ஊழியர்கள் அற்புதமான பலனைப் பெறுவார்கள். வியாபாரத்திற்காக இடத்தை மாற்ற வேண்டிய நிலை ஏற்படலாம்.

சிம்மம்

பொல்லாங்கு பேசுபவர்களால் உங்கள் மன நிம்மதி கெடும். தொழில்துறைகள் நிதானமாக நடக்கும். கூட்டுத் தொழிலில் எதிர்பார்த்த நன்மை கிடைப்பது கடினம். அரசு ஊழியர்கள் நிதானத்துடன் செயல்பட வேண்டும். ஒப்பந்தக்காரர்களுக்கு வரவேண்டிய பணம் தள்ளிப்போகும். நியாயத்துக்குப் புறம்பாக நடக்காதீர்கள். அதனால் சிக்கல்களைச் சந்திப்பீர்கள். மனதில் வேறு சிந்தனைகளுக்கு இடம் கொடுக்காதீர்கள்.

கன்னி

கணவன் மனைவி உறவில் நீடித்த சங்கடங்கள் நீங்கும். செய்த முதலீட்டில் உடனே வருமானம் வரும் என்று எதிர்பார்க்காதீர்கள். பங்குச் சந்தையில் அதிக பணம் போட வேண்டாம். போட்டி பந்தயங்கள் இருந்து விலகியிருங்கள். பொது இடங்களில் தேவையற்ற விவாதங்கள் செய்யாதீர்கள். வியாபார ரீதியாக அலைச்சல் அதிகரிக்கும். உடல் நலத்தில் அக்கறை எடுத்துக் கொள்ளுங்கள்.

துலாம்

மற்றவர்களுக்காக நீங்கள் செய்கின்ற வேலை தடங்கல் இல்லாமல் முடியும். வெளி வட்டாரங்களில் செல்வாக்கும் அந்தஸ்தும் உயரும். பண வரவு அதிகமாக இருப்பதால் கடனை அடைத்து நிம்மதி பெறுவீர்கள். இதுவரை தொழிலில் சிக்கலை ஏற்படுத்திய நெருக்கடிகள் விலகும். பைனான்ஸ், அடகுக்கடை, ஷேர் மார்க்கெட் போன்றவற்றில் நல்ல லாபத்தை எதிர்பார்க்கலாம்.

விருச்சிகம்

கடினமான நெருக்கடிகளைக் கடந்து செல்வீர்கள். இதுவரை உடல்நிலையில் இருந்த பாதிப்பு அகலும். மார்க்கெட்டிங் சேல்ஸ்மேன் என்ற அலைச்சல் மிகுந்த தொழிலில் மாற்றம் உண்டாகும். வியாபாரத்தில் கணிசமான லாபம் கிடைப்பதால் அதை விரிவுபடுத்த எண்ணம் கொள்வீர்கள். தனியார்துறை ஊழியர்களும் வருமானத்தைப் பெருக்கி சேமிப்பை அதிகரிப்பார்கள்.

தனுசு

உங்கள் புத்திசாலித்தனத்தால் வருமானத்தைப் பெருக்குவீர்கள். பணத்தின் மீது இருந்த மதிப்பை இப்போது உணர்ந்து கொள்வீர்கள். கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்ற பாடுபடுவீர்கள். இடுப்பு வலி மூட்டு வலி ஆகியவற்றால் பாதிப்பு உண்டாகலாம். தந்தைவழி உறவுகளால் சண்டை சச்சரவு உருவாகலாம். சுயதொழில் செய்வோர் தங்கள் நிலையை உயர்த்துவர்.

மகரம்

பணம் கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் இருமடங்கு எச்சரிக்கை தேவை. வருமானத்திற்காக இடம் விட்டு இடம் செல்ல வேண்டிய நிலை உருவாகலாம். கணவன் மனைவி இருவரும் அனுசரித்து நடந்தால் அமைதி உண்டாகும். யாருக்காகவும் ஜாமீன் கையெழுத்துப் போடாதீர்கள். பயணங்களில் அதிக எச்சரிக்கையாக இருங்கள். சந்திராஷ்டம நாள். நிதானம் தேவை.

கும்பம்

தந்தையின் உடல்நிலையில் பாதிப்பு வந்து அகலும். குடும்பத்தில் மங்கல நிகழ்ச்சிகள் நடப்பதற்கான ஏற்பாடுகள் செய்வீர்கள். இல்லத்தரசிகளின் தெய்வ வழிபாட்டால் கணவர்களுக்கு இருந்த உடல் நல பாதிப்பு அகலும். அரசுப் பணியாளர்களுக்கு செல்வாக்கு அதிகரிக்கும். பயணங்களில் கவனமும் நிதானமும் தேவை. அதனால் விபத்துகளைத் தவிர்க்கலாம். பணவரவு தாராளமாக இருக்கும்.

மீனம்

வியாபாரத்தில் இருந்த சின்னச் சின்ன சிக்கல்கள் அகலும். சிறு வியாபாரிகள் நல்ல லாபம் அடைவார்கள். பெட்டிக்கடை வைத்திருப்பவர்கள் கணிசமான பலன் பெறுவார்கள். ஒர்க் ஷாப், எலக்ட்ரீசியன், கொத்தனாருக்கு தொடர்ந்து வேலை கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள் போடுவீர்கள். அரசுத் துறையில் நல்ல ஒத்துழைப்புக் கிடைக்கும். கேட்ட இடத்தில் பண உதவி வந்து சேரும். கடன்கள் கட்டுக்குள் இருக்கும்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *