ஜல்லிக்கட்டை பாரம்பரிய விளையாட்டுக்களை ஊக்குவிக்க வீரவிளையாட்டு விழா நடத்தப்படும் சட்டபேரவையில் அமைச்சர் மதிவேந்தன் அறிவிப்பு
சென்னை, மே- 6
ஜல்லிக்கட்டு உள்ளிட்ட பாரம்பரிய விளையாட்டுக்களை ஊக்கப்படுத்த ஆண்டுதோறும் வீர விளையாட்டு திருவிழா நடத்தப்படும் என்று அமைச்சர் மதிவேந்தன் அறிவித்துள்ளார்,
தமிழக சட்டபேரவையில் சுற்றுலா மானியக்கோரிக்கை விவாதங்களுக்கு பதிலளித்து சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன்
தமிழ்நாட்டின் புகழ்பெற்ற நான்கு முக்கிய கோயில்களில் முப்பரிமாண லேசர்தொழில்நுட்பத்துடன் கூடிய ஓலி ஓளி காட்சிகள் இந்து சமய அறநிலையத்துறையுடன் இணைந்து அமைக்கப்படும் கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலைக்கு செல்லும் படகு போக்குவரத்தை மேம்படுத்த ரூ 7 கோடியில் புதிய படகு இறங்குதளம் அமைக்கப்படும், தென்னிந்தியாவின் ஸ்பா என்றழைக்கப்படும் குற்றாலம் நவீன வசதிகளுடன் ரூ 15 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும், கன்னியாகுமரியில் உள்ள முட்டம் கடற்கரை மர்றும் திற்பரப்பு நீர் வீழ்ச்சி ஆகிய சுற்றுலா தலங்கள் ரூ 6.60 கோடி மதிப்பீட்டில் சுற்றுலா தலமாக மேம்படுத்தப்படும்,தூத்துக்குடி கடற்கரை அஸ்தமனத்தை காண வருகை தரும் சுற்றுலா பயணிகளை ஊக்குவிக்கும் வகையில் நீர் விளையாட்டுக்கள் கடற்கரை விளையாட்டுக்கள் மற்றும் பல்வேறு வசதிகளுடன் கூடிய கடற்கரை சுற்றுலா தலமாக1.70 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும், ஜல்லிக்கட்டு போன்ற கிராமிய பாரம்பரிய விழாக்களை ஊக்குவிக்க வீரவிளையாட்டு திருவிழா ரூ 1 கோடி செலவில் நடத்தப்படும், என்று தெரிவித்தார்,
கலை பண்பாட்டுத்துறை சார்பில் அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்ட அறிவிப்பில் பிரம்மாண்டமான நாட்டுப்புற கலை விழாவான நம்ம ஊரு திருவிழா சென்னையோடு, கோவை, மதுரை, திருச்சி மற்றும் திருநெல்வேலி ஆகிய இடங்களில் 6 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடத்தப்படும் என்றும் அதன் மூலம் நாட்டுப்புற கலைஞர்கள் மாவட்ட அளவில் விழாக்கள் நடத்தி தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று அவர் கூறினார்,