மதுரை ஆவின் பாலகங்கள்  மற்றும் டெப்போக்கள் மூலமாக ரூ.3 கோடி  விற்பனை செய்யப்பட்டு வருகின்றது

Loading

மதுரை ஆவின் பாலகங்கள்
மற்றும் டெப்போக்கள் மூலமாக ரூ.3 கோடி  விற்பனை செய்யப்பட்டு வருகின்றது
செய்தியாளர் பயணத்தின் போது  மதுரை ஆவின் பொது மேலாளர் சாந்தி தகவல்
மதுரை மாவட்டம், ஆவின் பால் மற்றும் பால் உபபொருட்கள் 47 ஆவின் பாலகங்கள் மற்றும் 390 டெப்போக்கள் மூலமாக மாதம் ஒன்றிற்கு தோராயமாக சுமார் 3 கோடி அளவிற்கு விற்பனை என செய்தியாளர் பயணத்தின் போது  மதுரை ஆவின் மாவட்ட வருவாய் அலுவலர் / பொது மேலாளர் டி.ஆர்.டி.சாந்தி  தெரிவித்ததாவது
தமிழ்நாடு முதலமைச்சராக மு.க.ஸ்டாலின்  பொறுப்பேற்ற பின் 5 முக்கிய அரசாணைகள் பிறப்பித்துள்ளார்கள். அதில் இரண்டாவதாக பொதுமக்கள் நலன் கருதி ஆவின் பால் விலையை லிட்டர் ஒன்றுக்கு ரூ.3 வீதம் 16.05.2021 முதல் குறைத்து விற்பனை செய்ய தமிழ்நாடு முதலமைச்சர் அரசாணை பிறப்பித்துள்ளார்கள். பால் விலையை குறைத்ததற்கு பின்பு தற்பொழுது சுமார் 1.94 இலட்சம் லிட்டர் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் ஒன்றியத்திற்கு சுமார் 13,624 லிட்டர் விற்பனை உயர்ந்து சுமார் 2 லட்சம் மக்கள் பயனடைந்துள்ளனர்.
கடந்த 2021-2022-ஆம் ஆண்டு தணிக்கையின்படி மதுரை ஒன்றியத்தின் இலாபம் தோராயமாக  ரூபாய் 18.31 கோடி ஆகும். மதுரை ஒன்றியம் 1967-ஆம் ஆண்டு யுனிசெப் மூலமாக மதுரை பால்திட்டம் என துவங்கப்பட்டு அதன் பின்னர் 01.08.1981 முதல் மதுரை மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியமாக 38.29 ஏக்கர் பரப்பளவில் செயல்பட்டு வருகிறது. இவ்வொன்றியம் மதுரை மாவட்டத்தில் 720 கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கங்கள் மூலம் 1,83,532 லிட்டர் அளவில் நாளொன்றுக்கு பால் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. மேலும், இதர ஒன்றியங்களில் இருந்து நாளொன்றிற்கு சராசரியாக 1.80 இலட்சம் பால் பெறப்பட்டு கையாளப்பட்டு வருகிறது. மதுரை மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சுமார் 17,935 சங்க உறுப்பினர்கள் பால் உற்பத்தி செய்து வருகின்றனர்.
தற்போது இவ்வொன்றியமானது நாளொன்றிற்கு சுமார் 1,94,392 லிட்டர் பால் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. மேலும், என்சிடிஎப்ஐ மூலம் பிற மாநிலங்களுக்கு பால் மற்றும் பால் பவுடர் விற்பனை செய்யப்பட்டு ஒன்றியத்திற்கு இலாபம் பெறப்பட்டு வருகிறது.பால் உபபொருட்களான பால் பவுடர், பால் பேடா, நறுமண பால், பனீர் மைசூர்பா, வெண்ணெய் மற்றும் நெய்யாக உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. பால்பொருட்கள் மாதம் ஒன்றிற்கு சுமார்  ரூபாய் 2 கோடி வரையிலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மேலும் சென்னை இணையம் மற்றும் பிற ஒன்றியங்களிலிருந்து பிஸ்கட், பாயாசம் மிக்ஸ், பாதாம் பவுடர்,  Halwa, Fm Tetra, மில்க் ஷேக், மாவின், ஐஸ்கிரீம், நூடுல்ஸ், பால் பவுடர், டெய்ரி வொயிட்னர், சாக்லேட், குளாப்ஜாமுன் மற்றும் மிக்ஸ் போன்றவை கொள்முதல் செய்யப்பட்டு மதுரை ஒன்றியத்திலுள்ள பாலகங்கள் மற்றும் நிறுவனங்கள் மூலம் விற்பனை  செய்யப்பட்டு வருகிறது. அவ்வாறு உருமாற்றம் செய்யப்படும் பால் மற்றும் பால் உபபொருட்கள் 47 ஆவின் பாலகங்கள் மற்றும் 390 டெப்போக்கள் மூலமாக மாதம் ஒன்றிற்கு தோராயமாக சுமார் ரூபாய் 3 கோடி அளவிற்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
மேலும், MDR(Milk distribution route) வாகனம் மூலமாக சுமார் 65 ஒப்பந்த வாகனங்கள் மூலமாக நகர்ப்புற மற்றும் புறநகர் பகுதிகளுக்கு நாள் ஒன்றிற்கு 1,94,392 லிட்டர் பால் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றது. பால் விலை மாறுதலுக்கு முன்பு சுமார் 1.81 இலட்சம் லிட்டர் விற்பனை செய்யப்பட்டு வந்தது. மாசு கட்டுபாட்டு வாரிய அறிவுறுத்தலின்படி ஒன்றியத்தில் பயன்படுத்தி வந்த உலை எண்ணெய் Furnace Oil பயன்படுத்தி வந்த நிலையில் தற்பொழுது முழுவதுமாக நீக்கப்பட்டு உலை எண்ணெய்க்கு மாற்றாக  மாசு கட்டுபாட்டுபாட்டை குறைக்கும் வண்ணம் LPG எரிவாயு பயன்படுத்தப்பட்டு வருகின்றது. தமிழ்நாட்டிலுள்ள ஒன்றியங்களில் முதன்முறையாக மதுரை ஒன்றியத்தில் LPG எரிவாயு பயன்படுத்தப்படுத்தும் முறை கொண்டு வரப்பட்டுள்ளது.
மதுரை மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தின் மூலம் தற்போது நாளொன்றுக்கு 1.97 இலட்சம் கொள்முதல் செய்யப்பட்டு வரும் நிலையில் மாநிலத்திலேயே சென்னைக்கு அடுத்தபடியாக மதுரையில் தினசரி 1.95 லிட்டர் பால் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பால் பாக்கெட்டுகளில் நிர்ணயிக்கப்பட்ட கொழுப்பு சத்து நிறைந்த பாலாக விற்பனை செய்யவும் மற்றும் பால் உபபொருட்களான தயிர், மோர், பால்கோவா, மைசூர்பாகு, பனீர், நறுமணப்பால் தயாரிக்கவும் தேவையான 55 ஆயிரம் லிட்டர் பால் தினசரி தேனி ஒன்றியத்திலிருந்து செய்யப்பட்டு நுகர்வோர்களுக்கு பால் மற்றும் பால் உபபொருட்கள் தங்கு தடையின்றி விநியோகிக்கப்பட்டு வருகிறது. மேலும், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 25 இலட்சம் 100 மில்லி லிட்டர் நெய் ஜார்களாக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்திற்கு வழங்கி ஆவின் நெய்யுடன் அனைத்து மக்களும் பொங்கள் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடினர் என்பதும் மதுரை ஆவினின் சிறப்பாகும்.
பால் உபபொருட்கள் பற்றாக்குறையை தவிர்க்கும் பொருட்டு 15 டன் வெண்ணெய் பஞ்சாப்பிலிருந்து கொள்முதல் செய்யப்பட்டு நுகர்வோருக்கு நெய்யாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒன்றியத்தின் உபபொருட்களான தயிர், மோர், பால்கோவா, மைசூர்பாகு, பனீர், நறுமணப்பால் ஆகியவை தினந்தோறும் ரூபாய் 4 இலட்சம் மதிப்பில் விற்பனை செய்யப்படுகிறது என்பதையும், மேலும் விற்பனையை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும், மதுரை ஆவினின் பால் மற்றும் பால் உபபொருட்கள் விற்பனை அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு துரித நடவடிக்கைகளின் மூலம் தற்போது நாள் ஒன்றுக்கு 20 ஆயிரம் லிட்டர் பால் கொள்முதல் அதிகரித்துள்ள நிலையில் மேலும் பால் உற்பத்தியை அதிகரிக்க தொடர்ந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக செய்தியாளர் பயணத்தின் போது மதுரை ஆவின் பொது மேலாளர் டி.ஆர்.டி.சாந்தி தகவல் தெரிவித்துள்ளார்.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *