விவசாயிகளின் நலனுக்காக தமிழ் செயலி பிக்ஹாட் நிறுவனம் அறிமுகம்

Loading

இந்தியாவின் மிகப்பெரிய டிஜிட்டல், வேளாண் உட்பொருட்கள் செயல்தளமான பிக்ஹாட் தமிழ் மொழியில் ஒரு மொபைல் செயலியை அறிமுகம் செய்திருக்கிறது. தரவுகள், தொழில்நுட்பம் மற்றும் பயிர் அறிவியல் ஆகியவற்றை சிறப்பாக பயன்படுத்துவதன் மூலம் தனிப்பட்ட ஆலோசனைகளை வழங்கி இப்பிராந்தியத்திலுள்ள விவசாயப் பெருமக்கள் திறனதிகாரம் பெறச் செய்வதே இச்செயலி அறிமுகத்தின் நோக்கமாகும்.இதுகுறித்து
பிக்ஹாட் நிறுவனத்தின் இணை-நிறுவனர் சச்சின் நந்வானா கூறியதாவது: “சரியான, விவேகமான முடிவை விவசாயிகள் எடுப்பதற்கு உதவுவதற்காகவே பிக்ஹாட் செயலி (ஆப்) உருவாக்கப்பட்டிருக்கிறது. இச்செயலி அறுவடைக்கு முந்தைய நிலையிலிருந்து, அறுவடைக்கு பிந்தைய நிலை வரை சாகுபடி செய்யும் தங்களது பயிர்களுக்கான தேவைகளை விவசாயிகளால் பூர்த்தி செய்ய முடியும். பயிர்களுக்கு ஏற்படும் சேதங்களை குறைக்கவும், விளைச்சலையும் மற்றும் பயிரின் தரத்தையும் அதிகரிக்கவும் தரமான ஆலோசனைக் குறிப்புகளை இச்செயலி உரிய நேரத்திற்குள் வழங்கும். பயிரின் சாகுபடி காலம் முழுவதிலும் விவசாயிக்கு அவருக்கெனவே பிரத்யேகமான ஆலோசனைகளை இச்செயலி வழங்கும் என்பது இதன் தனிச்சிறப்பாகும். தங்களது சொந்த தாய்மொழியான தமிழில் இதன் வாசகங்களை விவசாயிகள் எளிதாக வாசிக்கவும், தங்களது அறிவை இன்னும் செழுமையாக்கிக் கொள்ளவும் முடியும்,” என்று கூறினார்.
அக்ரோ புட் சேம்பர் ஆப் காமர்ஸ் அண்ட் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் இரத்தினவேலு பேசுகையில், ” பிக்ஹாட்டின் தமிழ் ஆப்பை தொடங்கி வைப்பதில் நான் மிகவும் பெருமை கொள்கிறேன். இந்த ஆப் விவசாயிகளிடையே பெரிதும் மாற்றத்தை ஏற்படுத்தும். விவசாயத்தை இன்று பலரும் விரும்புவதில்லை. விவசாயம் செய்வதென்பது அறிவியில் தொழில்துறையைக் காட்டிலும் கடினமானதாக உள்ளது. இந்த பிக்ஹாட் ஹாட் ஆப் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். இது விவசாயிகளுக்கு  தொழில்நுட்பத்தை எளிமையாக்கி அவர்களின் கைகளுக்கு கொண்டு சேர்க்கும் மற்றும் அவர்களுக்கு முன்கூட்டியே விவசாயம் தொடர்பான அனைத்து தீர்வுகளை வழங்கும்” என்று தெரிவித்தார்.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *