மே-01 கிராம சபை கூட்டத்தில் கலந்துகொண்ட மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர்
இளையாங்குடி, மே-02,
சிவகங்கை மாவட்டம் இளையாங்குடி ஊராட்சி ஒன்றியம் அ. நெடுங்குளம் ஊராட்சி கிருஷ்ணாபுரம் கிராமத்தில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில் மானாமதுரை சட்ட மன்ற உறுப்பினர் தமிழரசிரவிகுமார் கலந்துகொண்டு பேசினார்.
கிராம மக்களின் கோரிக்கைகளான ரேசன் கடை, துணை சுகாதார நிலையத்திற்கு புதிய கட்டிடம் என பொதுமக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றிக்கொடுப்பதாகக் கூறினார்.
கிராம சபைக் கூட்டத்தில் முனைவென்றி
அரசு ஆரம்ப சுகாதார நிலைய மரு.தாமோதரன், குழந்தை பிறப்பில் ஆண், பெண் பாலின சமத்துவத்தைப்பற்றி பொதுமக்களிடம் சிறப்பாக எடுத்துக்கூறினார்.
அப்பொழுது நோயாளிகளுக்கு மருந்து பெட்டகத்தை சட்ட மன்ற உறுப்பினர் தமிழரசிரவிகுமார் வழங்கினார்.
கிராம சபைக் கூட்டத்தில் கேள்விகேட்ட நெடுங்குளம் கிராமம் ராஜ்குமார் என்பவரை கூட்டத்திலிருந்து காவலர்கள் வெளியேற்றினர்.
நெடுங்குளம் கிராமத்தில் கடந்த 14-04-2022 அன்றிரவு இரவோடு இரவாக திருட்டுத்தனமாக அமைக்கப்பட்ட சர்ச்சைக்குரிய சாலையை
கூட்டம் முடிந்த பின்பு சட்டமன்ற உறுப்பினர் திறந்து வைத்தார்.
இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு அ.நெடுங்குளம் ஊராட்சிமன்ற மூன்றாவது வார்டு உறுப்பினர் தேவிசிவசாமி, கிருஷ்ணாபுரம் கிராமத்திற்கு அடிப்படை வசதிகளை ஊராட்சி நிர்வாகம் செய்து தரவில்லை என்றுகூறி அவரது பதவி விலகல் கடிதத்தை வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கொடுத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்திவருகிறது.